மின்சாரம் தாக்கி டீக்கடை உரிமையாளர், ஊழியர் பலி – மதுரை அருகே சோகம்
Fatal Rain Accident : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கனமழை பெய்த நிலையில் டீக்கடையில் இருந்த சீரியல் லைட்டை கழற்ற முயன்ற உரிமையாளரும், டீ மாஸ்டரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, டிசம்பர் 3: தமிழகம் முழுவதும் தித்வா (Ditwah) புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், டீ(Tea) கடையின் முன்பு இருந்த சீரியல் லைட்களை அகற்றும் போது மின்சாரம் தாக்கி, கடை உரிமையாளரின் மகன் மற்றும் டீ மாஸ்டர் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மழையின் காரணமாக ஈரப்பதமாக இருந்ததால் இந்த விபத்து நடந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
மதுரை மாவட்டம் வடிப்பட்டிக்கு அருகே உள்ள நீரேத்தான் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் ஆண்டிபட்டி பங்களா பகுதியில் தேநீர் கடை மற்றும் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த கடையில் சோழவந்தானைச் சேர்ந்த பாலகுரு டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2, 2025 அன்று சோமசுந்தரத்தின் மகன் ரஞ்சித் குமார் மற்றும் டீ மாஸ்டர் பாலகுரு ஆகியோர் கடையில் இருந்திருக்கின்றனர்.
இதையும் படிக்க : மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!




இந்த நிலையில் வாடிப்பட்டியில் இரவு 1 மணி முதல் 2 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனையடுத்து, கடையின் முன்புறத்தில் கட்டப்பட்டிருந்த சீரியல் லைட்களை அவிழ்க்க டீ மாஸ்டர் பாலகுரு முயன்றபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து அவர் அலறியதைக் கேட்டு, ரஞ்சித் குமார் அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : அரசுப் பேருந்து – வேன் மோதி விபத்து: 2 பெண்கள் பலி.. காலையிலேயே கோரம்!!
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்ததும், வாடிப்பட்டி போலீஸ் நிலைய ஆய்வாளர் வளர்மதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு வடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழ்ந்த தேநீர் மாஸ்டர் பாலகுருவுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 6 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு துணை நின்ற இருவரின் திடீர் மரணம் வடிப்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.