Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை.. எப்போது தெரியுமா? முழு விவரம்!

Tamil Nadu New Mini Buses : தமிழகத்தில் புதிய மினி பஸ் திட்டம் 2025 ஜூன் 15ஆம் தேதி அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 1,870 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, இதற்கான வழித்தடங்கள் உள்ளிட்டவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை.. எப்போது தெரியுமா? முழு விவரம்!
மினி பேருந்து சேவைImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 May 2025 07:29 AM

சென்னை, மே 11 : தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை (Tamil Nadu Mini Buses) திட்டம் 2025 ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,842 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் போக்குவரத்து சேவை என்பது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு மாவட்டங்களுக்கு எளிதாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கு சென்று வரக்கூடிய வகையில், ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதோடு, உள்ளூரிலேயே பேருந்து சேவைகளும் உள்ளன. பெண்களுக்கான விடியல் பேருந்து திட்டமும் அனைத்து கிராமங்கள் வரையும் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை

சென்னையை பொறுத்தவரை,  சொகுசுப் பேருந்து, தாழ்தள பேருந்து, சாதாரண பேருந்து என இயக்கப்பட்டு வருகிறது.  இந்த பேருந்து சேவைகள் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் புதிய மினி பேருந்து சேவை திட்டம் 2025 ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, புதிய மினி பேருந்து திட்டம்  2025 ஜூன் 15ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,842 மினி பேருந்து சேவை இயக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, மினி பேருந்து போக்குவரத்து சேவை இல்லாத இடங்களில் 17 கிலோ மீட்டர் வரை பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போக்குவரத்து சேவை உள்ள இங்களில் 4 கிலோ மீட்டர் வரை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

எப்போது தெரியுமா?

கூடுதலாக 1 கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் உள்ளிட்டவைகள் இருந்தால் அந்த தொலைவுக்கு பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில், அனுமதியில்லா வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவையில்லா இடத்தில் எங்கு வேண்டுமானாலும் மனி பேருந்தை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மினி பேருந்து சேவைக்கான டிக்கெட் கட்டணம் ரூ.2 கிலோ மீட்டருக்கு 4 ரூபாயும், 26 கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

ஏற்கனவே, தமிழகத்தில் 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சேவை மேம்படுத்தும் நோக்கில் கூடுதலாக போக்குவரத்து துறை இயக்கப்பட உள்ளது. இது கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் பிரச்னை... உள்ளே வரும் அமெரிக்கா... டிரம்ப் அறிவிப்பு
காஷ்மீர் பிரச்னை... உள்ளே வரும் அமெரிக்கா... டிரம்ப் அறிவிப்பு...
கள்ளழகர் எந்த வண்ண பட்டு உடுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
கள்ளழகர் எந்த வண்ண பட்டு உடுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?...
அமிர்தசரஸில் பதற்றம் - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
அமிர்தசரஸில் பதற்றம் - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை...
குருபகவானின் சுப பார்வை.. கும்ப ராசிக்கு காத்திருக்கும் பலன்கள்!
குருபகவானின் சுப பார்வை.. கும்ப ராசிக்கு காத்திருக்கும் பலன்கள்!...
ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்
ஹஜ் பயணம் போறீங்களா? தமிழக அரசு தரும் ரூ.25,000 மானியம்...
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!...
அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க
அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க...
பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை எப்போது?
பஞ்சப்பூர் முனையத்தில் இருந்து பேருந்து சேவை எப்போது?...
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்; மதுரையில் போக்குவரத்து மாற்றம்
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்; மதுரையில் போக்குவரத்து மாற்றம்...
நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்
நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்...
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி!
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி!...