Tamil Nadu Budget 2026 Announcement LIVE : இடைக்கால பட்ஜெட்.. அறிவிப்புகளை வெளியிடும் நிதியமைச்சர்!

Tamil Nadu Interim Budget 2026-27, FM Thangam Thennarasu Speech Announcement LIVE Updates in Tamil : 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்கால பட்ஜெட் (Interim Budget) இன்று தாக்கல் சட்டப்பேரவையில் செய்யப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்

Tamil Nadu Budget 2026 Announcement LIVE : இடைக்கால பட்ஜெட்.. அறிவிப்புகளை வெளியிடும் நிதியமைச்சர்!

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் நேரலை

Updated On: 

17 Feb 2026 11:53 AM

 IST

LIVE NEWS & UPDATES

  • 17 Feb 2026 11:53 AM (IST)

    நெருக்கடியை ஒன்றிய அரசு கொடுக்கிறது

    தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:50 AM (IST)

    Tamil Nadu Interim Budget : வரிப்பங்கு குறைப்பால் ரூ. 1202 கோடி இழப்பு

    மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறது.  வரிப்பங்கு குறைப்பால் ரூ. 1202 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது – நிதியமைச்சர்

  • 17 Feb 2026 11:41 AM (IST)

    Tamil Nadu Interim Budget : 35.33 இலட்சம் பயனாளிகள்

    அனைத்துச் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களில் 35.33 இலட்சம் பயனாளிகள் பலன். மொத்தமாக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்

  • 17 Feb 2026 11:34 AM (IST)

    எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு

    தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்… எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு… முழு விவரம் இதோ

  • 17 Feb 2026 11:31 AM (IST)

    ரூ.281 கோடியில் தீயணைப்பு வாகனங்கள்

    5 ஆண்டுகளில் ரூ.281 கோடியில் தீயணைப்பு வாகனங்கள் & பாதுகாப்புக் கருவிகள். 37 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் – நிதியமைச்சர்

  • 17 Feb 2026 11:24 AM (IST)

    மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி

    நாட்டிலேயே முதலிடமாக மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்பு – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:21 AM (IST)

    30.79 கோடி சுற்றுலா பயணிகள்

    “சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:14 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள்

    நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்:  பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள் கட்டப்பட்டுள்ளன 53,227 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன – நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு

  • 17 Feb 2026 11:11 AM (IST)

    10 புதிய கைத்தறிப் பூங்காக்கள் – தங்கம் தென்னரசு

    கைத்தறி & துணிநூல்: ரூ. 20 கோடியில் 10 புதிய கைத்தறிப் பூங்காக்கள் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:04 AM (IST)

    5 ஆண்டுகளில் 38 புதிய கலை & அறிவியல் கல்லூரி

    தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 38 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:02 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு

    5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:59 AM (IST)

    மகளிர் விடியல் பேருந்து பயணம் அறிவிப்பு

    மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு  

  • 17 Feb 2026 10:56 AM (IST)

    எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி

    மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:53 AM (IST)

    போக்குவரத்துத்துறை நிதி

    போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:52 AM (IST)

    Tamil Nadu Interim Budget : கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில்

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:41 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா

    ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:32 AM (IST)

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:24 AM (IST)

    Tamil Nadu Interim Budget : 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்

    புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:19 AM (IST)

    Tamil Nadu Interim Budget : விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

    “இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு” -அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:13 AM (IST)

    Tamil Nadu Interim Budget : பெண்களுக்கான திட்டங்கள் இவை

    விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:12 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : இதுவரை முக்கிய தகவல்கள்

    19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்

    மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது.

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:11 AM (IST)

    41% பெண்கள் தமிழ்நாட்டில்!

    தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்” -அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:07 AM (IST)

    Tamil Nadu Interim Budget : 6.7 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்

    10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டத்தில் 6.7 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது

  • 17 Feb 2026 10:06 AM (IST)

    ⁠Thangam Thennarasu TN Budget Speech : உயர்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி

    உயர்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது –  தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:02 AM (IST)

    Tamil Nadu Interim Budget : ரூ.5463 கோடி ஒதுக்கீடு.. விவரம்!

    சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்காக ரூ.5463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 17 Feb 2026 10:00 AM (IST)

    Tamil Nadu Budget : மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:55 AM (IST)

    காலை உணவுத்திட்டம் – அமைச்சர் புகழாரம்

    காலை உணவுத்திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:49 AM (IST)

    ⁠Tamil Nadu Interim Budget : ஒரே நாளில் ரூ. 6500 கோடி நிதி

    எதிர்கால வரும் தடைகளை நிறை நேரத்தில் கணித்து மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. வங்கி கணக்கில் ஒரே நாளில் ரூ. 6500 கோடி நிதி விடுவிக்கப்பட்டது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:45 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : 285 கோடி ரூபாயில் அருங்காட்சியங்கள்

    தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் 285 கோடி ரூபாயில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ 10 கோடியில் அழகர் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:42 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : இரும்பு பிரித்தெடுப்பு தமிழ்நாட்டில் தான் தோன்றியது

    தமிழ்நாட்டு கலையை வெளிநாட்டில் பரப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன இரும்பு தாதுவிலிருந்து இரும்பு பிரித்தெடுப்பு தமிழ்நாட்டில் தான் தோன்றியது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:39 AM (IST)

    தமிழ் மொழிக்கான சேவைகள்

    அம்பேத்கரின் படைப்புகள் எளிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெறுகிறது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:37 AM (IST)

    தமிழ்நாட்டை பின்பற்றும் பிற மாநிலங்கள்

    தமிழ்நாட்டின் நலத்திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நாட்டிற்கே வழிகாட்டும் பொறுப்புணர்வுடன் தமிழக முதல்வர் திகழ்கிறார் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:35 AM (IST)

    Tamil Nadu Budget 2026 : 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம்

    நாட்டின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது –  தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:32 AM (IST)

    Tamil Nadu Budget 2026 : இடைக்கால பட்ஜெட் தாக்கல்

    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:23 AM (IST)

    Tamil Nadu Interim Budget: சட்டப்பேரவையில் காதுகுத்து விழா

    இடைக்கால பட்ஜெட் நடக்கவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் காது குத்து விழா நடைபெறவுள்ளதாக அழைப்பிதழ் வெளியிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

  • 17 Feb 2026 09:05 AM (IST)

    அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்

    Tamil Nadu Interim Budget: இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

  • 17 Feb 2026 08:50 AM (IST)

    பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

    இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது

  • 17 Feb 2026 08:35 AM (IST)

    புதிய அறிவிப்புகள் வருமா?

    Tamil Nadu Interim Budget: இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேர்தல் காரணமாக மகளிர் உரிமைத் தொகை ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக வரவு வைக்கப்பட்டது. அதோடு, திமுக மீண்டும் ஆட்சியை தொடரும்போது ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 17 Feb 2026 08:20 AM (IST)

    முக்கிய அறிவிப்புகள் வர வாய்ப்பு

    சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமல்லாதது, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்​களைக் கவரும் வகையிலும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளதாக கூறப்படுகிறது

  • 17 Feb 2026 08:10 AM (IST)

    இடைக்கால பட்ஜெட்டை புகழும் அமைச்சர்கள்

    Tamil Nadu Interim Budget: பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் இடைக்கால பட்ஜெட் இருக்கும் என தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதேபோல, எதிர்க் கட்சிகள் அரண்டு போகும் அளவுக்கு இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் தெரிவித்திருந்தார்.

  • 17 Feb 2026 07:57 AM (IST)

    Tamil Nadu Interim Budget: மக்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்

    Tamil Nadu Interim Budget 2026: இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் மக்கள் இந்த பட்ஜெட்டை எதிர்பார்க்கின்றனர்.

  • 17 Feb 2026 07:55 AM (IST)

    ஆய்வு செய்த அமைச்சர்

    பட்ஜெட் என்பதால் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு சட்டப்பேரவையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கைகள், மேஜைகள், அவர்கள் பேசும் மைக்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

  • 17 Feb 2026 07:54 AM (IST)

    இடைக்கால பட்ஜெட் இன்று

    Tamil Nadu Interim Budget 2026: இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9:30 மணி அளவில் தாக்கல் செய்ய உள்ளார்.

Tamil Nadu Interim Budget Speech 2026 Live Updates: ஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதேபோல இந்த இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆனால் அவரது பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் பதிவாகவில்லை. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜன.22, 23ல் எம்எல்ஏக்கள் விவாதித்தனர். அவர்களின் விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ல் பதிலளித்துப் பேசினார். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் இடைக்கால பட்ஜெட் தினமாக இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது, தமிழக அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று சமர்பிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தல் காலம் என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?