மகளிர் உரிமைத்தொகை – மூன்றரை மணி நேரத்தில் ரூ.5000 – தங்கம் தென்னரசு சொன்ன தகவல்!
நாடே போற்றும் இந்த திட்டத்தின் பயன்கள் எதிர்வரும் மாதங்களில் கிடைத்திட, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாத மகளிர் உரிமைத் தொகையுடன், கோடை சிறப்பு தொகை ரூ.2000 என ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தங்கம் தென்னரசு
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
அதன்படி, மகளிரின் வாழ்வு மேம்படுத்திட தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், முதன்மையான திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இல்லங்களில் மகளிரின் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், ரூ.1000 உரிமைத்தொகை திட்டம். இந்தியாவில் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.
3 மணி நேரத்தில் ரூ.5000:
நாடே போற்றும் இந்த திட்டத்தின் பயன்கள் எதிர்வரும் மாதங்களில் கிடைத்திட, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாத மகளிர் உரிமைத் தொகையுடன், கோடை சிறப்பு தொகை ரூ.2000 என ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த வெளிக்கிழமையன்று காலை 3 மணி நேரத்தில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி கடலில் திகைத்தனர். மகளிர் மனம் குளிர, ஒரேநாளில் ரூ.6,500 கோடி ஏழை பெண்களின் இல்லங்களில் முதல்வர் சேர்க்க வழிவகை செய்துள்ளார்.