உயர்நிலை மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

R. N. Ravi Commends Tamil Nadu’s Education Conditions: தமிழ்நாட்டின் கல்வி நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். ஐஐடியின் 75வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், உயர் கல்வி மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களையே படிக்க முடியவில்லை என்றார்.

உயர்நிலை மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி

Published: 

18 Jan 2026 18:45 PM

 IST

சென்னை, ஜனவரி 18 : சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில், இந்தியாவில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜனவரி 18, 2026 அன்று சிறப்பு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி (RN Ravi) மற்றும் இசையமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஆளுஞர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “தொழில்நுட்பம் தொடர்பான இந்த கருத்தரங்கில் இசை மேதை இளையராஜா பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தை இந்தியா அடையும்” என்று தெரிவித்தார். மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 30 சதவீத மக்கள் வறுமையில் வாழ்ந்த நிலையில், தற்போது அது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியா தன்னிறைவு தொழில்நுட்ப பாதையில் பயணித்து வருகிறது.

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் நிலை

ஐஐடிகள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனாலும், கல்வி முறை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் மனித வளத்தை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தியுள்ளது. இனி நாட்டிற்கே பயனுள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும்.  ஒருபுறம் தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. ஆனால், மொத்த சேர்க்கை விகிதமான ஜிஇஆர் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்திய சராசரியை விட அதிகம். ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 2 லட்சம் பொறியியல் பட்டதாரர்கள் வெளியேறுகிறார்கள். இந்தியாவில் உள்ள மொத்த பொறியியல் மாணவர்களில் 18 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிக பிஎச்.டி பட்டதாரர்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

‘உயர்நிலை மாணவர்களால் 2ஆம் வகுப்பு பாடங்களையே படிக்க முடியவில்லை’

இவ்வளவு கல்வி சாதனைகள் இருந்தும், தமிழ்நாடு முதலீடுகளை ஈர்ப்பதில் பின்னடைவை சந்தித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 சதவீத முதலீடுகளை தமிழ்நாடு பெற்றிருந்தது. தற்போது அது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு கல்வியின் தரமே முக்கிய காரணம்.  தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களையே புரிந்து வாசிக்க முடியாத நிலை இருப்பது மிகவும் கவலைக்குரியது என்றார்.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!