“ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை”.. அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!!

Ashwini Vaishnaw alleges: அரசு ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளித்து, தேவையான நிலத்தையும் கையகப்படுத்தி வழங்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே முன்பணமாக நிதியை வழங்கியுள்ளோம். தேவைப்பட்டால், மேலும் நிதி வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.. அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!!

அஸ்வினி வைஷ்ணவ்

Updated On: 

03 Feb 2026 08:41 AM

 IST

டெல்லி, பிப்ரவரி 03: தமிழக அரசு ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளித்து, தேவையான நிலத்தையும் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியின் போது ஒதுக்கப்பட்டதை விட 9 மடங்கு அதிகமாகும் என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: மார்ச்சில் அமலுக்கு வரும் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்!

தமிழ்நாட்டிற்கு அம்ரித் பாரத் ரயில்கள்:

அதாவது, 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. சமீபத்தில் நான்கு அம்ரித் பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளன.

தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்:

தமிழ்நாட்டிற்கு மேலும் பல ரயில் பெட்டிகளை நாங்கள் தயாரித்து வழங்குவோம். தமிழ்நாட்டில் 97 சதவீத மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இது மிக விரைவில் 100 சதவீதத்தை எட்டும். ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும். ரயில்வே திட்டங்களுக்கு 4,326 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இருப்பினும், இதுவரை 1,052 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் 24 சதவீதம் மட்டுமே. ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 100 சதவீத நிலமும் கையகப்படுத்தப்பட்டால், அதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைய முடியும். எனவே, தமிழக அரசு எங்களுடன் ஒத்துழைத்து இணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் நிதி வழங்க தயார்:

அரசு ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளித்து, தேவையான நிலத்தையும் கையகப்படுத்தி வழங்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே முன்பணமாக நிதியை வழங்கியுள்ளோம். தேவைப்பட்டால், மேலும் நிதி வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

88 கிலோமீட்டர் நீளமுள்ள ஆத்திப்பட்டு – புதூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 189 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது, ஆனால் இதுவரை ஒரு சதுர அடி நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. அதேபோல், 41 கிலோமீட்டர் நீளமுள்ள மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டம் மற்றும் 52 கிலோமீட்டர் நீளமுள்ள தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?

மாநில அரசு ஆதரவு தேவை:

மாநில அரசு ரயில்வே திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், ரயில்வே திட்டங்கள் தமிழகத்திற்கும் அதன் மக்களுக்கும் மிகவும் முக்கியமானவை. ஒரு மாநிலம் தனது போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய வளர்ச்சியை அடைவது ரயில்வே திட்டங்கள் மூலமாகத்தான். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!