CRPF Officer Jewellery Theft: சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு.. வழக்குப்பதிய தாமதம் செய்ததா காவல்துறை..?

CRPF Jawan Jewellery Theft Complaint: ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள தமிழ்நாட்டு CRPF பெண் அதிகாரியின் வீட்டில் நகை திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததாக அவர் அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், போலீசார் விசாரணை நடப்பதாகவும், FIR தாமதமாகப் பதிவு செய்யப்பட்டது என்பது பொய் என்றும் தெரிவித்துள்ளனர்.

CRPF Officer Jewellery Theft: சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு.. வழக்குப்பதிய தாமதம் செய்ததா காவல்துறை..?

சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வெளியிட்ட வீடியோ

Published: 

05 Aug 2025 19:56 PM

வேலூர், ஆகஸ்ட் 5: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) தற்போது ஜம்மு காஷ்மீரில் (Jammu and Kashmir) பணியில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், தமிழ்நாட்டில் தனது வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அழுதபடி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வேகமாக வைரலானது. இந்தநிலையில், காவல்துறையினர், சந்தேகப்பட கூடிய நபர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், எஃப்.ஐ.ஆர் லேட்டாக போடப்பட்டதாக சொல்வது பொய் என்று தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது..?


வேலூர் மாவட்டத்தை அடுத்த பொன்னை நாராயணபுரத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் 32 வயதான கலாவதி, ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப்பில் காவலராக இருந்து வருகிறார். இவர் அழுது கொண்டே வெளியிட்ட வீடியோவில், தனது திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த நகைகள் எவ்வாறு திருடப்பட்டன என்பதையும், உள்ளூர் காவல்துறையினர் எவ்வாறு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவித்தார்.

ALSO READ: ராமதாஸ் தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார்.. டி.எஸ்.பி அலுவலகத்தில் மனு..

இதுகுறித்து கலாவதி வெளியிட்ட வீடியோவில், “ என் வீட்டியில் பூட்டு உடைக்கப்பட்டு என் திருமணத்திற்காக வைத்திருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டன. என் அம்மா ஆடு மேய்த்து விட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டன. என் சகோதரர் திரும்பி வந்தபோது என் பெற்றோர் அழுது கொண்டிருப்பதை பார்த்து, கடந்த 2025 ஜூன் 24ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், அடுத்த நாளான அதாவது 2025 ஜூன் 25ம் தேதி முதலமைச்சரின் பாதுகாப்பு பணி இருப்பதாக கூறி யாரும் விசாரிக்க வரவில்லை. பின்னர்தான் கைரேகை சேகரிக்கப்பட்டு கடந்த 2025 ஜூன் 28ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் விளக்கம்:

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கலாவதியின் தந்தை குமாரசாமி கடந்த 2025 ஜூன் 24ம் தேதி தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து புகார் அளித்தார். அதில், கலாவதியின் திருமணத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ, 59 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு பட்டு சேலை ஆகியவை திருடப்பட்டாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ALSO READ: 7 வயது சிறுமியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. சிறுமிக்கு தீவிர சிகிச்சை!

கடந்த 2025 ஜூன் 25ம் தேதி பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், கைரேகை மாதிரிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூன் 29ம் தேதி குமாரசாமி தனது புகாரை திருத்தி, திருடப்பட்ட நகைகள் 22.5 சவரன் என மாற்றினார்.இது தொடர்பான எஃப்.ஐ.ஆர் காப்பியையும் கொடுத்துவிட்டோம்.” என்று தெரிவித்தனர்.

மேலும், கலாவதியை மணந்து பின்னர் விவாகரத்து பெற்ற சந்தோஷ் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.