கடும் குளிர்.. தர்மபுரியில் 16 டிகிரி வரை குறைந்த வெப்பநிலை.. தமிழகத்தில் தொடரும் பனிமூட்டம்..

Tamil Nau Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் முறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர்.. தர்மபுரியில் 16 டிகிரி வரை குறைந்த வெப்பநிலை.. தமிழகத்தில் தொடரும் பனிமூட்டம்..

கோப்பு புகைப்படம்

Published: 

22 Jan 2026 06:15 AM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 22, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. மழைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. இந்தச் சூழலில் அதிகாலை வேளையில் தொடர்ந்து பணிமூட்டம் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்தச் சூழலில், ஜனவரி 22, 2026 தேதியான இன்று தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அதிகாலை வேளையில் லேசான பணிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதேபோல, ஜனவரி 23 அன்று கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி பொருத்தவரையில், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை வரக்கூடிய ஜனவரி 27ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு

குறையும் வெப்பநிலை:

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் முறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 33.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதே சமயத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை தர்மபுரியில் 16.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. கொடைக்கானல் மற்றும் மூட்டைப்போன்ற மலைப்பகுதிகளில் 4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த நிலை வரக்கூடிய நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு – வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

தொடரும் பனிமூட்டம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸாக பதிவாகி வருகிறது. அதே சமயத்தில் அதிகாலை வேளையில், குறிப்பாக மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், கிண்டி, சின்னமலை, பரங்கிமலை, அடையாறு, கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிமூட்டம் காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 21 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?