மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் – நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்

MK Stalin : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் - நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்

மு.க.ஸ்டாலின் - ராமதாஸ்

Published: 

06 Oct 2025 15:51 PM

 IST

சென்னை, அக்டோபர் 6 : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அக்டோபர் 5, 2025 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலில் அசௌகரியங்கள் இருந்ததாகவும், இதனால் அவருக்கு இதய பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அவரை அக்டோபர் 6, 2025 அன்று காலை முதலே பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை அப்போலோ மருத்துவமனையில் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 6, 2025 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சகர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க : ’கரூர் துயரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்’ பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸை சந்தித்து அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வரின் எக்ஸ் பதிவு

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் சந்திக்க மருத்துவமனை சென்றார். அப்போது அவர் ஐசியூவில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை எனவும் மருத்துவர்களை சந்தித்து பேசியதாகவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பாமகவின் இளைஞரணி தலைவர் தமிழக்குமரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிக்க : மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்.. பதறி ஓடிய அன்புமணி.. நலம் விசாரிப்பு!

பாமகவின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் சமீபத்தில் பாமகவின் இளைஞரணித் தலைவராக ராமதாஸால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அன்புமணியுடனான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ராமதாஸ் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ராமதாஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலம் பெற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.