Tamil Nadu CM MK Stalin: முதல்வர் டெல்லி பயணம்..! விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. ட்வீட் மூலம் திருப்பி அடித்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin's Delhi Trip: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஸ்டாலின், தமிழ்நாட்டின் நிதி உரிமைகளைப் பாதுகாக்க இந்தப் பயணம் எனவும், பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் பதிலடி கொடுத்தார்.

Tamil Nadu CM MK Stalin: முதல்வர் டெல்லி பயணம்..! விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. ட்வீட் மூலம் திருப்பி அடித்த மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

Published: 

21 May 2025 14:55 PM

 IST

சென்னை, மே 21: புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) முடிவு செய்ததற்காக, அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (AIADMK) பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) கடுமையாக விமர்சித்தார். அதில், இந்த பயணம் பொது நலனை விட தனிப்பட்ட காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றும், மத்திய கொள்கை சிந்தனை குழு குறித்த தனது நிலைப்பாட்டை முதலமைச்சர் மாற்றிக்கொண்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி:

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கூறியதாவது..

  • தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 2025 மே 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.
  • சசிகலா முதல் மத்திய உள்துறை அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
  • “பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
  • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
  • இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
  • கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

என பதிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன..?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு காலத்தில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பெருமையாக கூறி, மத்திய அரசு தமிழ்நாட்டை தவிர்ப்பதாக கூறி, இப்போது திடீரென கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு மக்களுக்கு தேவையானபோது அவர் செல்லவில்லை. ஆனால் இப்போது அவர் குடும்ப நலனுக்காக செல்கிறார். அதிகாரப்பூர்வ பணி என்ற போலிக்காரணத்தின் கீழ் இந்த வருகை மேற்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்