தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவு.. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!!
Tamilnadu birth rate decline: பிறப்பு விகிதம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.3 முதல் 1.5 சதவீதம் வரை குழந்தை பிறப்பு விகிதம் உயர்ந்து வந்தாலும், தமிழகத்தில் மட்டும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைவு
தமிழகத்தில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது மக்கள் தொகை 146 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள் தொகை வளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. நாட்டில் இறப்பு விகிதம் ஒரு புறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள் தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. நாட்டில் இறப்பு விகிதம் ஒரு புறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள் தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க: மழையும் இருக்கு பனியும் இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..
தமிழகத்தில் பிறப்பு விகிதம் சரிவு:
அதேசமயம், தமிழகத்தைப் பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு மொத்தமாக 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்துள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 2,591 குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால், நடப்பு 2025ம் ஆண்டில் நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக மட்டுமே உள்ளது. இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு சராசரியாக 2,138 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர்.
ஆண்டுக்கு 8 லட்சம் குழந்தைகள் கூட பிறப்பதில்லை:
பிறப்பு விகிதம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதன்படி, டிசம்பர் மாதம் முடிவடைய இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்தாலும், 8 லட்சத்தை தாண்டுவது கடினம் என தெரிவிக்கப்படுகிறது.
6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 18% வீழ்ச்சி:
இந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.3 முதல் 1.5 சதவீதம் வரை குழந்தை பிறப்பு விகிதம் உயர்ந்து வந்தாலும், தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு காத்திருக்கும் சிக்கல்:
தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, தொழிலாளர்கள் பற்றாக்குறை உருவாகும். இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் வளர்ச்சி வேகமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும் அபாயமும் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
அதே சமயம், முதியோர் விகிதம் அதிகரிப்பதால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வதும், முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவதும் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.