VCK leader Thirumavalavan: திமுக, பாஜக எதிர்ப்பு! அதிமுக என்றால் தோழமைக்கட்சியா..? தவெக விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Tamil Nadu 2026 Elections: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து இயங்கும் என திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர், தமிழ்நாடு வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளன. விஜயின் தவக அதிமுகவுடனான தோழமையைப் பற்றிய திருமாவளவனின் கருத்து வேறுபாடு குறித்தும், பரந்தூர் விவகாரத்தில் விஜயின் நிலைப்பாட்டை வரவேற்றது குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

தவெக தலைவர் விஜய் - திருமாவளவன்
திருச்சி, ஜூலை 05: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழக (DMK) தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து இயங்கும் என ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் (V.C.K. leader Thirumavalavan) தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், பாஜகவுடன் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்தது. அதேநேரத்தில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் (TVK Vijay) புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக, பாஜக என்றா எதிர்ப்பு என்றும், ஆனால் அதிமுகவை தோழமைக்கட்சியாக விஜய் பார்க்கிறாரா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக தோழமைக்கட்சியா..?
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “திமுக முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாடு மக்களுக்கானதாக இருக்கும். அந்த வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் என்பது அதிமுகவிற்கோ அவர்கள் கூட்டணிக்கோ எதிரானது என்பதை விட சனாதான சக்திகளுக்கு எதிரானது என்பதுதான் சரியானதாக இருக்கும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவையும், பாஜகவை மட்டுமே கொள்கை எதிரியாக பார்ப்பதாக தெரிவித்தார். ஆனால், தமிழ்நாட்டின் மற்றொரு முக்கிய கட்சியான அதிமுகவை பற்றி எதுவும் சொல்லவில்லை. விமர்சனமாக ஒரு சில கருத்தைகளை மட்டும் அதிமுகவிற்கு எதிராக கூறினாலும், அதிமுகவும் எங்களது எதிரிதான். அவர்களது கொள்கையும் எதிரிதான் என்றும் அழுத்தி எதுவும் விஜய் கூறவில்லை. எனவே, அங்கு ஒரு கேள்வி எழுகிறது.
ஆகவே திமுகவை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார், பாஜகவை தமிழ்நாட்டிற்கு விரோதமான கட்சி என்று எதிர்க்கிறார் என்று நாம் புரிந்து கொண்டாலும், அதிமுகவை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு அவர்தான் விடை சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
விஜய் கூறியதை வரவேற்கிறேன்:
இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில்… pic.twitter.com/zLR5cdglWh
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 5, 2025
பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என தவெக தலைவர் விஜய் கூறிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து பதிலளித்த திருமாவளவன், “பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமென்றால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.