போதைப் பொருள் வழக்கு.. நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் காவல்.. நீதிமன்றம் உத்தரவு

Srikanth Arrest : போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கைதான 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கு.. நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் காவல்.. நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீகாந்த் கைது

Updated On: 

24 Jun 2025 07:16 AM

 IST

சென்னை, ஜூன் 24 : போதைப் பொருள் வழக்கில் (Drug Abduction Case) கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு (Srikanth Arrest) 15 நாட்கள் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து 14வது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை அடுத்து, அவருக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இவர்கள் கொகைன் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் கைதான அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைதான நடிகர் ஸ்ரீகாந்த்

அதில், இவர்களுக்கு கொகைன் சப்ளை செய்ததாக ஆப்பிரிக் நாடானா கயானாவைச் சேர்ந்த ஜான் என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, கைதான ஜானிடம் யார் யாருக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பிரபல சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் அடிபட்டது. இதனை அடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என கூறினார்.

ஆனால், போதைப் பொருள் சப்ளை செய்ததாக ஜான் குறிப்பிட்டிருந்தது குறித்து போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதனை அடுத்து, போலீசார் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

 

14 நாட்கள் நீதிமன்ற காவல்


அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூன்று போதைப்பொருள் சப்ளை செய்தவர்களிடம் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருந்ததாக போலீசார் கூறினர். மேலும், ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி வேலை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த கொகைன் பெங்களூருவில் இருந்து அந்த கும்பலுக்கு கிராமுக்கு ரூ.7,000க்கு வாங்கி, அதை சென்னையில் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதில், ஸ்ரீகாந்த் 40 முறை போதைப் பொருள் வாங்கி உள்ளதாகவும், டீலர் பிரதீப்பிற்கு ரூ.4.72 லட்சம் பண பரிவர்த்தனை செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்தின் பெயர் மூன்றாவதாக சேர்க்கப்பட்டுள்ளது. கைதான ஸ்ரீகாந்துக்கு 14வது பெருநகர நீதிமன்றம் 2025 ஜூலை 7ஆம் தேதி நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Follow Us
Related Stories
ஹேப்பி நியூஸ்! மே 2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!
மகளைக் கொன்ற இளைஞர் ஜாமீனில் விடுதலை.. 5 மாதம் காத்திருந்து பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் பயங்கரம்!!
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?