ஓணம் பண்டிகை.. சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Onam Special Train : ஓணம் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கண்ணூருக்கும், பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று தொடங்கப்படுகிறது.

ஓணம் பண்டிகை.. சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ரயில்கள்

Updated On: 

27 Aug 2025 12:20 PM

சென்னை, ஆகஸ்ட் 27 :  ஓணம் பண்டிகையையொட்டி (Onam Special Train), சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்றும் தொடங்கப்படுகிறது. இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்ல பலரும் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் பண்டிகை காலங்களில் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், ஓணம் பண்டியையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேரளாவில் முக்கிய பண்டிகைளில் முக்கியமானது ஓணம். 2025 செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், பலரும் கேரளாவிற்கு படையெடுப்பார்கள்.  இந்த நிலையில், தெற்கு ரயில்வே ஓணம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி,  சென்னை சென்ட்ரல்கண்ணூர் சிறப்பு ரயில் 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று இரவு 11.55 மணிக்கு சென்டரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.

Also Read :  முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி ஆகிய இடங்களில் நின்று ச்லலம. மேலும், கண்ணூர்பெங்களூரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

Also Read : இதயம் வரை சென்று குத்திய ஊசி.. நாகையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

மறுமார்க்கத்தில், பெங்களூருவில் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது. இந்த ரயில் தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், பாலக்காடு, போதனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்கார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, பயணிகள்  தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.