கோடை வெயிலில் தென் மாவட்டங்களுக்கு குளிர்ச்சியான செய்தி.. கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
south Districts Rain Update | தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது. இந்த நிலையில் தான், ஒருசில நாட்களாக மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மே 10 : தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் (Tamil Nadu) கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில், கடும் வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கல் குறையும்?
தமிழகத்தில் மே 04, 2026 அன்று கத்தரி வெயில் தொடங்கியது. இந்த நிலையில், அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், அப்படி நிகழாமல் கடந்த சில நாடகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், தற்போது குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலவும் காற்று சுழற்சி, தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இதற்கிடையில் கிழக்கு காற்று ஊடுருவல் இருப்பதாலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்யை அறிவித்த ஆளுநர்! – வெளியான தகவல்
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்கிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்
இந்த மழை நிலவரம் தமிழகத்தில் மே 14, 2026 வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.