நடுரோட்டில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்.. செருப்பால் அடித்த விசிக நபர்.. பரபரப்பு!

Airport Moorthy Atttack By VCK : சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பு, ஏர்போர்ட் மூர்த்தியை விசிக நபர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் ஏர்போர்ட் மூர்த்தியை தகாத வார்த்தைகளால் பேசியும், செருப்பால் தாக்கியும் இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.

நடுரோட்டில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்.. செருப்பால் அடித்த விசிக நபர்.. பரபரப்பு!

ஏர்போர்ட் மூர்த்தி

Updated On: 

06 Sep 2025 14:15 PM

 IST

சென்னை, செப்டம்பர் 06 : சென்னை தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் முன்பு, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் தொல்.திருமாவளவனை இழிவாக பேசியதாக கூறி, ஏர்போர்ட் மூர்த்தியை நடுரோட்டில் செருப்பதால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், பாமக பிரமுகருமான ம.க.ஸ்டாலின் மர்ம கும்பல் 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று அவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது. ம.க.ஸ்டாலின் வெடிகுண்டு வீசி தாக்க முயன்றனர். இதில், ம.க.ஸ்டாலின் நூலிழையில் உயிர் தப்பினார்.

இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. மர்ம கும்பலை பிடிக்க போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தான் ஆடுதுறையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, டிஜிபி அலுவலகத்தில் பாமகவினர் புகார் அளிக்க வந்தனர்ன. அப்போது, அவர்களுக்கு ஆதரவாக புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியும் வந்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு வெளியே, ஏர்போர்ட் மூர்த்தி நின்றுக் கொண்டிருந்தார்.

Also Read : வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பாமக பிரமுகர்.. தஞ்சையில் பதற்றம்

அப்போது, அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர், ஏர்போர்ட் மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். தகாத வார்த்தைகளால் அவரை திட்டி, கன்னத்தில் அறைந்துள்ளார். டிஜிபி அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரும் இந்த தாக்குதலை தடுக்க முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கி வந்துள்ளார்.

நடுரோட்டில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்


தனது காலில் கிடந்த செருப்பால், ஏர்போர்ட் மூர்த்தி மீது வீசியிருக்கிறார். நீண்ட நேரம் இந்த தாக்குதல் நீடித்தது. ஒரு கட்டத்தில் விசிக நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.  டிஜிபி அலுவலகம் எதிரே  நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, “நான் இரண்டு முறை புகார் கொடுத்துள்ளேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என இரண்டு முறை புகார் கொடுததுள்ளேன்.

Also Read : அதிமுக – பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்.. மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை கருத்து..

ஆனால், எனது புகாரை காவல்துறை எடுக்காது. நிலைமை சரியில்லை பார்த்து இருந்துக்கோங்க என்று தான் காவல்துறை கூறுகிறது. என் மீதான தாக்குதல் காவல்துறை மற்றும் அரசுக்கும் தெரிந்தே நடக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி மீதான தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.