அஜித் குமார் காவல் விசாரணையில் தான் உயிரிழந்துள்ளார்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை!

Madurai High Court Confirms Ajith's Custodial Death | சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையில் தான் உயிரிழந்துள்ளார் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. அஜித் குமார் தொடர்பான அத்தனை வழக்குகளும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 08, 2025) விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது.

அஜித் குமார் காவல் விசாரணையில் தான் உயிரிழந்துள்ளார்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை!

உயிரிழந்த அஜித் குமார்

Updated On: 

08 Jul 2025 15:28 PM

மதுரை, ஜூலை 08 : சிவகங்கையில் (Sivagangai) நகை காணாமல் வழக்கில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், காவல்துறையின் விசாரணையின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. அஜித் குமாரின் மரண வழக்கு விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 08, 2025) தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றத்தின் இதனை உறுதி செய்துள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் இளைஞர் அஜித் குமார். இந்த நிலையில், நகை காணாமல் போன விவகாரத்தில் சந்தேகத்தின் பெயரில் போலீசார் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், விசாரணைக்கு சென்ற அஜித் குமார் பிணமாக வீடு திரும்பினார். அஜித் குமாரின் மரணத்திற்கு, விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய தாக்குதலே காரணம் என தகவல் வெளியான நிலையில், அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில், அடுத்த ஒரு சில நாட்களிலேயே அஜித் குமாரை போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியது. இதனை தொடர்ந்து வெளியான அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வழக்கு சிபிஐ கைக்கு மாறியது.

அஜித் குமார் காவல் விசாரணையில் தான் உயிரிழந்துள்ளார் – நீதிமன்றம்

அஜித் குமாரின் மரண வழக்கில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அஜித் குமார் காவல் விசாரணையில் தான் உயிரிழந்துள்ளார் என்பதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற விசாரணையில், இது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், அஜித் குமார் விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ, இந்த வழக்கில் மேலும் சில காவலர்களின் பெயர்கள் இணைக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் தற்போது வரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில காவலர்களின் பெயர்களும் இதில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.