ஈவு இரக்கமின்றி தாக்கிய போலீஸ்.. அலறும் இளைஞர் அஜித் குமார்.. காவல் நிலையத்தில் என்ன நடந்தது?

Sivaganga Custodial Death : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தது மாநிலத்தையை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குமாரை கண்மூடித்தனமாக குச்சியால் போலீசார் தாக்குவது பதிவாகி உள்ளது. 

ஈவு இரக்கமின்றி தாக்கிய போலீஸ்.. அலறும் இளைஞர் அஜித் குமார்.. காவல் நிலையத்தில் என்ன நடந்தது?

அஜித் குமார் மரணம்

Updated On: 

01 Jul 2025 15:28 PM

 IST

சிவகங்கை, ஜூலை 01 : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் (Sivaganga Custodial Death) உயிரிழந்தது மாநிலத்தையை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குமாரை கண்மூடித்தனமாக குச்சியால் போலீசார் தாக்குவது பதிவாகி உள்ளது.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் பணிபுரிந்து வந்தவர் 27 வயதான அஜித் குமார். இவர் அக்கோயிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அக்கோயிலுக்கு மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் காரில் வந்துள்ளார். அப்போது, அவர் தரிசனத்தை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது, காரில் வைத்திருந்த 9 சவரன் நகை காணாமல் போனதாக அவர் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை இளைஞர் மரணம்

இது தொடர்பாக விசாரிக்க அஜித் குமார் உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அஜித் குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. அஜித் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் தாக்கியதால் தான் அஜித் குமார் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டி ஈடுபட்டனர்.

மேலும், அஜித் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல், தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் குற்றச்சாட்டினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போலீசார் 5 காவல்களை கைது செய்தனர். மேலும், 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை 2025 ஜூன் 30ஆம் தேதி நடைபெற்றது.  இதில் அஜித் குமாரின் உடலில் 30 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அஜித் குமாரின் கை, கால்கள், உட்புற உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

கொடூரமாக தாக்கிய போலீஸ்

மேலும், மரண வழக்கை கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து,  இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றறப்பட்டுள்ளார்.  இப்படியான சூழலில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதில், குச்சியால் அஜித் குமாரை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு 2025 ஜூலை 1ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையை சரமாரியாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..