SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.. இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்!!

Election Commission issue Notice: அவ்வாறு தேர்தல் ஆணைய தரப்பில் இருந்து நோட்டீஸ் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆஜராகாதவர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.. இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

25 Dec 2025 07:30 AM

 IST

சென்னை, டிசம்பர் 25: தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீரமைக்க தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (Special Intensive revision) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பீகாரில் தொடங்கிய இந்த பணி, தற்போது 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இப்பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்:

கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி 14ம் தேதியுடன் முடிவடைந்த முதல் கட்ட பணிக்குப் பிறகு, 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது. மொத்தம் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில், இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரி மாற்றியவர்கள் – 66.44 லட்சம் பேர், இரட்டை பதிவில் இருந்தவர்கள் – 3.98 லட்சம் பேர் ஆவர்.

இந்நிலையில், வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம்-6 நிரப்பி, உறுதிமொழிச் சான்றிதழுடன் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பணி ஜனவரி 18 வரை நடைபெறும். பின்னர் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19ஆம் தேதி வெளியாகும்.

புதிய சர்ச்சை –  தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:

தேர்தல் ஆணையத்தின் புதிய வழிமுறையின்படி, 2002 (கிராமப்புறம்) மற்றும் 2005 (நகர்ப்புறம்) வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் அல்லது பெற்றோரின் பெயர் இருந்ததற்கான தகவலை வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. அந்தவகையில், சென்னையில் மட்டும் 2.37 லட்சம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் பேருக்கும் என மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இது, பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: VIBE WITH MKS.. தமிழ்நாட்டின் இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது:

அவ்வாறு தேர்தல் ஆணைய தரப்பில் இருந்து நோட்டீஸ் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆஜராகாதவர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. இதனால் அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாது. இதனால், ஏற்கனவே 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை கிளப்பிய நிலையில், மேலும் 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கிரிக்கெட்டை தொடரவே விருப்பமில்லை என்று நினைத்தேன்”.. ஓய்வு குறித்து மனம்திறந்த ரோஹித் சர்மா!!
"பாம்பு சட்டை போல், உரிந்து வரும் தோல்".. விஷ சிலந்தி கடியால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்திற்கான பட்ஜெட் இவ்வளவா?
"இப்படியே அவரை வைத்திருக்க முடியாது".. கருணைக் கொலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு!!