வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

draft voter list: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியானவர்கள் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் விண்ணப்பித்து பெயரைச் சேர்க்கலாம். ஏற்கனவே பட்டியலில் உள்ள பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, தேவையற்ற பெயர்களை நீக்கவோ விரும்புவோர் படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோப்புப் புகைப்படம்

Updated On: 

25 Dec 2025 10:56 AM

 IST

சென்னை, டிசம்பர் 25: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட்நாயக் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீரமைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (Special Intensive revision) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பீகாரில் தொடங்கிய இந்த பணி, தற்போது 2வது கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வருகிறது. அதன்படி,தமிழகத்தில் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க: 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

5.43 கோடியாக குறைந்த வாக்காளர் எண்ணிக்கை:

அந்தவகையில், தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது. மொத்தம் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில், இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரி மாற்றியவர்கள் 66.44 லட்சம் பேர், இரட்டை பதிவில் இருந்தவர்கள் 3.98 லட்சம் பேர் ஆவர்.

ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம்:

தொடர்ந்து, வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம்-6 நிரப்பி, உறுதிமொழிச் சான்றிதழுடன் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பணி ஜனவரி 18 வரை நடைபெறும். பின்னர் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19ஆம் தேதி வெளியாகும்.

4 நாட்கள் சிறப்பு முகாம்:

இந்த காலக்கட்டத்தில், தகுதியான மக்கள் எளிதில் விண்ணப்பிக்கச் செய்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிசம்பர் 27, 28 (சனி, ஞாயிறு), அடுத்த மாதம் ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு நாட்களில்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும் படிக்க: பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பதில்

யார் யாருக்கு எந்தெந்த படிவம்:

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியானவர்கள் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் விண்ணப்பித்து பெயரைச் சேர்க்கலாம். ஏற்கனவே பட்டியலில் உள்ள பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, தேவையற்ற பெயர்களை நீக்கவோ விரும்புவோர் படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் படிவம்-8 மூலம் சமர்ப்பிக்கலாம்.

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..