திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி.. பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு.. நடந்தது என்ன?

Tiruchendur Temple : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கடலில் நீராடி கொண்டிருந்தபோது, அலையில் சிக்கி பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி.. பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு.. நடந்தது என்ன?

திருச்செந்தூர் கோயில்

Updated On: 

16 Aug 2025 17:44 PM

தூத்துக்குடி, ஆகஸ்ட் 16 : திருச்செந்தூர் கடலில் அலையில் சிக்கி விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு (Tiruchendur Temple) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் குளித்தபோது, அலை அடித்து பாறைகளுக்கு இடையே சிக்கி பக்தர்களின் காலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.  தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திருச்செந்தூர் முருகனை காண வருவார்கள். சமீபத்தில் கூட, திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோலாகலமாக குடமுழுக்கு நடந்தது.

இந்த நிலையில், தொடர் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆடி கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Also Read : தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை தொடங்கும் டிக்கெட் முன்பதிவு..

பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு

வழக்கமாக பக்தர்கள் கடலில் நீராடி முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குளிக்கச் சென்றிருக்கின்றர். அப்போது, அங்கு சிலர் அலையில் சிக்கியதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட அலையில் சிக்கி அங்கிருந்த பாறைகளுக்கு இடையே சிக்கினர்.

இதில் அவர்களது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உடனே பாதிக்கப்பட்டவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்சுமார் 10க்கும் மேற்பட்ட பக்தர்களின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Also Read : வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

காயம் அமடந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளனர். பக்தர்க பாதுகாப்பாக நீராட வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருச்செந்தூர் கடலில் பக்தர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்டம் கூட்டமாக சேர வேண்டாம் எனவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.