கிருஷ்ணகிரியில் கோரம்.. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.. 3 பேர் பலி

Krishnagiri Accident : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் கோரம்.. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.. 3 பேர் பலி

விபத்து

Updated On: 

20 Jul 2025 20:33 PM

கிருஷ்ணகிரி, ஜூலை 20 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று முன்னால் சென்ற லாரி மீது மோத, அடுத்தடுத்து 2 கார்கள், 4 லாரிகள், அரசுப் பேருந்து, 2 இருசரக்கர வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், நாள்தோறும் சாலை விபத்து நடந்து வருகிறது. இந்த சாலை விபத்துகளால்  ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.  சாலை விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அப்படி இருந்தும்,  ஓட்டுநர்களின் அலட்சியத்தால் சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. அப்படியொரு விபத்து  தான் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

அதாவது, சேலம் பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்றுக்  கொண்டிருந்த சரக்கு லாரி முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதனை அடுத்து, அதற்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த 2 கார்கள், 4 லாரிகள், அரசுப் பேருந்து, 2 இருசரக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Also Read : ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்!

இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீப்பு படையினரும் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 7 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பேசிய கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை, “இந்த விபத்தில் மொத்தம் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. இரண்டு கார்களும் ஒரு இரு சக்கர வாகனமும் இரண்டு லாரிகளுக்கு இடையில் நொறுங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Also Read : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்.. குளித்தலையில் அதிர்ச்சி..

இப்போது போக்குவரத்தை சரி செய்துவிட்டோம்” என்றார்.  இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த விபத்து  சேலம் பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்பு பணி முடிந்தவுடன் வாகனங்கள அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சேவை சீரானதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.