2 கார்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
Government Bus Accident: திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடுப்புகளைத் தாண்டி எதிர் திசையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் அருகே பேருந்து விபத்தில் 9 பேர் பலி
கடலூர், டிசம்பர் 24 : கடலூர் (Cuddalore) மாவட்டம் திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடுப்புகளைத் தாண்டி எதிர் திசையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ராமநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சமீப காலமாக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் டிசம்பர் 24, 2025 அன்று மாலை சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அரசு பேருந்தின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலைத் தடுப்பை கடந்து, எதிர்திசையில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க : மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை…நெல்லை நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை!
இந்த விபத்தில் இரண்டு கார்களும் கடும் சேதமடைந்தன. இதனையடுத்து காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் அருகே அரசு பேருந்து விபத்தில் 30 பேர் படுகாயம்
இதே போல சேலம் கொச்சி தேசிய நெஞ்சாலையில் கர்நாடகா அரசு பேருந்து பெங்களூருவில் டிசம்பர் 23, 2025 அன்று புறப்பட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 24, 2025 அன்று அதிகாலை, திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது சரக்கு லாரியின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : பைக்கில் கட்டுக்கட்டாக பணம்.. பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து கடத்தல்.. ஷாக்கான போலீஸ்!
அரசு பேருந்து விபத்துகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே கவலையை அதிகரித்திருக்கிறது. அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.