வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Sea Cucumbers And horses Seized: ராமநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகளை கடலோர பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!

(மாதிரி படம்) ராமநாதபுரத்தில் கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்

Updated On: 

29 Jan 2026 10:13 AM

 IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே உள்ள ஒரு வீட்டில் கடல் வாழ் உயிரினங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த திடீர் சோதனையில், கடல் வாழ் உயிரினங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான 110 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவற்றை கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டை-குதிரைகள்

இந்த விசாரணையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் குதிரைகள் மற்றும் கடல் அட்டைகளை மருந்து பொருட்கள் தயார் செய்வதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட முயன்ற நபர்களை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகளை கடலோர பாதுகாப்பு படை போலீசார், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க: Chennai Crime: சென்னையை உலுக்கிய ட்ரிபிள் மர்டர்.. மனைவியின் உடலை தேடும் பணியில் போலீசார்.. நடந்தது என்ன?

ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு

முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகள் ஆகியவற்றை கடலோர காவல் படையில் அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட முயன்ற நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ராமநாதபுரத்தில் பொது மக்கள் அதிகளவு வசித்து வரக்கூடிய பகுதியில் கடல் அட்டைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு அதனை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருந்து பொருள்களுக்கு பயன்படும் கடல் அட்டை-குதிரைகள்

கடல் குதிரைகளை பாரம்பரிய சீனா மருத்துவம் மற்றும் நாட்டுப்புற மருத்துவத்தில் ஆஸ்துமா, மூட்டு வலி, தோல் நோய், ஆண்மை குறைவு ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர அழகு பொருட்கள், அரிய வகை மீன் வளர்ப்பு மற்றும் அலங்கார பொருட்களாகவும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, கடல் அட்டைகள் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மிக விலை உயர்ந்த உணவாகவும், பாரம்பரிய மருத்துவத்தில் மூட்டு வலி ஆண்மை குறைபாடு, சோர்வு ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் மற்றும் சத்து மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க: பைக்கில் பெற்றோருடன் சென்ற கைக் குழந்தைக்கு நேர்ந்த கதி…ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Related Stories
ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?