அதிகனமழை எதிரொலி – கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Heavy Rain ALert : தித்வா புயல் காரணமாக, நவம்பர் 29, 2025 அன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்ப்டடிருக்கிறது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவிட்டார். 

அதிகனமழை எதிரொலி - கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Nov 2025 15:38 PM

 IST

கடலூர், நவம்பர் 28 : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை (Sri Lanka) ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27, 2025 அன்று புயலாக மாறியது. இதற்கு தித்வா (Ditwah) எனப் பெயரிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நவம்பர் 29, 2025 அன்று நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்ப்டடிருக்கிறது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தித்வா புயல் காரணமாக கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 29, 2025 அன்று நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதித்துள்ளார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை.. வெதர்மேன் வானிலை அலர்ட்!

மாவட்ட ஆட்சியர் பதிவு

 

முன்னதாக நவம்பர் 28, 2025 அன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்ப்டடுள்ளது. மேலும் வட மாவட்டங்களில் சில இடங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ராமநாதபுரம், சிவகங்களை திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கனமழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

இந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நவம்பர் 28, 2025 நாள் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தித்வா புயல் காரணமாக கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் 28, 2025 அன்று நிலவரப்படி அங்கு இதுவரை கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்ப்டடுள்ளது. ரயில் சேவைகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!