உஷார்.. ஷூவில் இருந்த பாம்பு.. கவனிக்காமல் அணிந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

Cuddalore Crime : கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 12 வயது சிறுவனை பாம்பு கடித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஷூவை அணிந்த சிறுவனை, அதற்குள் இருந்த சுருண்ட கிடந்த பாம்பு கடித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் சிறுவனை ஷூவை தட்டாமல் போட்டதால், இந்த விபரீதம் நடந்துள்ளது.

உஷார்.. ஷூவில் இருந்த பாம்பு.. கவனிக்காமல் அணிந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

படுகாயம் அடைந்த சிறுவன்

Updated On: 

26 Aug 2025 07:21 AM

கடலூர், ஆகஸ்ட் 26 : கடலூர் மாவட்டத்தில் ஷூவில் இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஷூவை அணியும் போது, சிறுவன் அதனை தட்டாமல் போட்டதால், பாம்பு கடித்துள்ளது தெரியவந்துள்ளது. பாம்பு கடி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள் தெரியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகளால் பாம்பு கடிக்கு ஆளாகுகின்றனர். அந்த வகையில், கடலூரைச் சேர்ந்த சிறுவன் செய்த சிறு தவறால், அவரை பாம்பு கடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவதுகடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இதனால், மகன்களுடன் ராதா திட்டக்குடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கார்த்திக், கவுசிக் (12) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதியான நேற்று வழக்கம் போல், தனது இளைய மகன் கவுசிக்கை பள்ளிக்கு அனுப்ப தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் கவுசிக் ஷூவை அணிந்துள்ளார். அப்போது, ஷூவில் ஒரு பாம்பு ஒன்று மறைந்து இருந்துள்ளது. இதனை சற்றும் கவனிக்காமல், பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் சிறுவன் கவுசிக் ஷூவை மாட்டியுள்ளார்.

Also Read : அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!

பாம்பு கடித்து  12 வயது சிறுவன் காயம்

அப்போது, அதனுள்ளே சுருண்டு கிடந்த பாம்பு கவுசிக்கை கடித்துள்ளது. இதனால், வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்துள்ளார். மேலும், மயங்கியும் விழுந்துள்ளார். இதனை கேட்ட ரதா அங்கு வந்துள்ளார். இதற்கிடையில், ஷூவில் இருந்த பாம்பு வெளியேறி ஓடியது. அதை பார்த்து ராதா, தனது மகனை பாம்பு கடித்துள்ளது என்று அறிந்து, உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

Also Read : விநாயகர் சதுர்த்தி விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?

அங்கு சிறுவனுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சிய்ல இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், சிறுவன் வீட்டு வாசலில் இருந்த ஷூவில் பாம்பு இருந்தது தெரியவந்தது. சிறுவன் அதை கவனிக்காமல் பேட்டதால், பாம்பு கடித்துள்ளது தெரியவந்துள்ளதுஎனவே, ஷூவை அணியும் போது, தினமும் அதனை தட்டி போட வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.