இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசின் புதிய திட்டம்.. எப்போது தெரியுமா?

Tamil Nadu Ration Shops : தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில், அதற்கான திட்டம் தமிழக அரசு 2025 ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சென்னை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..  தமிழக அரசின் புதிய திட்டம்..  எப்போது தெரியுமா?

ரேஷன் பொருட்கள்

Updated On: 

28 Jun 2025 18:06 PM

 IST

சென்னை, ஜூன் 28: தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் (Ration Items) வழங்கும் திட்டம் 2025 ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவ்ல வெளியாகி உள்ளது. இதற்காக ஒரு திட்டத்தையும் தமிழக அரசு (Tamil Nadu Goverment) 2025 ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 10 மாவட்டங்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகள் மூலம் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2.25 கோடி குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

இவர்கள் அனைவரும் மாதந்தோறும் நியாய விலை கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இதற்காக நியாய விலைக் கடைகளில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர். ஆனால், முதியவர்கள், மாற்றித்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நியாய விலை கடைகளில் வரிசையில் நின்று வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.

அவர்கள் தங்கள் சார்பில் வேறு நபர்களை அனுப்பி ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் சூழல் உள்ளது. இப்படியான சூழலில், தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. அதாவது, வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில், புதிய திட்டம் 2025 ஜூலை 1ஆம் தேதி தமிழக அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 மாவட்டங்களில்  அறிமுகம்

சோதனை அடிப்படையில் 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டாக 10 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, நாகப்பட்டினம், தருமபுரி, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற உள்ளது.

இதில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையை தொடந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

சோதனை முறையில் திட்டத்தை செயல்படுத்தும்போது, ஏற்படும் சிக்கல்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்படலாம். அதன்பிறகு, அந்த பிரச்னை எப்படி சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் நிலையில், அடுத்த கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்