Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ORSL, ORS FIT கரைசல்கள் விற்பனைக்கு தமிழகம் முழுவதும் தடை.. மீறினால் நடவடிக்கை!

ஏற்கெனவே, FSSAI இந்த ஓஆர்எஸ்எல் (ORSL), ஓஆர்எஸ்எல் பிளஸ் (ORSL PLUS), ஓஆர்எஸ் ஃபிட் (ORS FIT) போன்ற போலியான கரைசல்கள்களுக்கு தடை விதித்திருந்தது. அந்தவகையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை இந்த பெயரில் மருந்துகளில் உள்ள கரைகள்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ORSL, ORS FIT கரைசல்கள் விற்பனைக்கு தமிழகம் முழுவதும் தடை.. மீறினால் நடவடிக்கை!
ORSL, ORS FIT கரைசல்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Nov 2025 06:59 AM IST

சென்னை, நவம்பர் 01: தமிழ்நாட்டில் ஓஆர்எஸ் (ORSL) கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. அதோடு, ஓஆர்எஸ்எல் (ORSL), ஓஆர்எஸ்எல் பிளஸ் (ORSL PLUS) ஓஆர்எஸ் ஃபிட் (ORS FIT) என பெயர் அச்சிட்டு மருந்தகத்தில் விற்பனை செய்யவும் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. மேலும், ORSL விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை மருந்தகம், கடைகளிலிருந்து பறிமுதல் செய்யவும் தமிழக உணவு பாதுகாப்புதுறை மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு போலி விற்பனைாளர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஓஆர்எஸ் (ORS) எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகள் உண்டாகும் போது ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அப்போது, நமது உடலிலிருந்து உப்பும் (sodium), சர்க்கரையும் (Glucose) அதிக அளவில் வெளியேறிவிடுகின்றன. இந்தநிலையில், குளுக்கோஸ் இருந்தால் மட்டுமே, உடலால் சோடியத்தை உறிஞ்சி நீரைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இவை இரண்டும் இழக்கப்படும்போது, அது சிறுநீரக செயலிழப்பு  அல்லது மூளை வீக்கம் போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.  இதற்காகவே உப்பு, எலக்ட்ரோலைட்டுகள், குளுகோஸ் அடங்கியுள்ள ORS கொடுக்கப்படுகிறது. அந்தவகையில், சரியான அளவு மற்றும் விகிதத்தில் கலக்கப்பட்ட ORSஆக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இழந்த சத்துக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுக்க அது உதவும்.

ORSL-ஆல் பெரும் ஆபத்து:

அதாவது, ஓரல் ரீஹைடிரேஷன் சொல்யூஷன் என்பதன் சுருக்கமாகவே ORS என்று அழைக்கப்படுகிறது. ஓஆர்எஸ்ல்(ORSL) தண்ணீர், உப்பு எலக்ட்ரோலைட்கள் மற்றும் குளுக்கோஸ் அடங்கியுள்ளது. ஆனால், மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும், ஓஆர்எஸ்எல் (ORSL), ஓஆர்எஸ்எல் பிளஸ் (ORSL PLUS), ஓஆர்எஸ் ஃபிட் (ORS FIT) எடுத்துக்கொண்டால் நோயின் தன்மை மேலும் தீவிரமடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த மருந்துகளில் அதிகளவு சோடியம் குளுகோஸ் இருப்பதால் அதை உட்கொண்டால் நோயின் தாக்கம் தீவிரமடைவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை ஓஆர்எஸ் (ORS) இல்லை:

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஓஆர்எஸ்எல் என்று பெரிய கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்ட போலியான பானங்கள் பல்வேறு வண்ண நிற பெட்டிகளில் விற்பனையாகி வந்தது. அதில், கடைசியாகக் கீழே, இவை ஓஆர்எஸ் இல்லை என்று அச்சிடப்பட்டிருப்பதையும் காண முடியும்.

ORSL, ORS FIT கரைசல்கள் விற்பனைக்கு தடை:

இந்நிலையில், WHO, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் பெயர் அச்சிடப்பட்ட ORS மட்டுமே விற்க தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், ஓஆர்எஸ்எல் (ORSL), ஓஆர்எஸ்எல் பிளஸ் (ORSL PLUS), ஓஆர்எஸ் ஃபிட் (ORS FIT)  என்ற கரைசலை மருந்தகம், கடைகளிலிருந்து பறிமுதல் செய்ய தமிழக உணவு பாதுகாப்புதுறை மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு போலி விற்பனைாளர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.