ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம்.. நூலிழையில் முதியவரை காப்பாற்றிய போலீஸ்.. குவியம் பாராட்டு
Chennai Park Railway Station : சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் கீழே விழுந்துள்ளார். அவரை அங்கிருந்த ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். இதனை அடுத்து, அந்த முதியவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

முதியவரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்
சென்னை, செப்டம்பர் 17 : சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு, சரியான நேரத்தில் முதியவரை காப்பாற்றியுள்ளார். நூலிழையில் முதியவரை காப்பாற்றிய போலீசாருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் தினமும் பயணித்து வருகின்றனர். சென்ட்ரல் – தாம்பரம், சென்ட்ரல் – செங்கல்பட்டு, கடற்கரை – தாம்பரம் – செங்ல்பட்டு, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் ரயில் சேவை இல்லாவிட்டாலும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். ரயில் சேவையை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது, ரயில் நிலையங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சிலர் ரயிலை பிடிபதற்காக வேகமாக ஓடும் ரயில்களில் ஏறி வருகின்றனர். இதனால், சில விபரீத சம்பவங்களும் நடந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான், தற்போது சென்னையில் பார்க் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அதாவது, ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை.. அதிர்ச்சி பின்னணி
ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம்
Swift action saves a life!
At #ChennaiPark station, RPF Constable Shri Ajay Singh rescued a 71-year-old passenger who slipped while boarding a moving EMU. His timely act reflects RPF’s unwavering commitment to passenger safety.#SafetyFirst #RPF pic.twitter.com/ttpoHLpmyU
— DRM Chennai (@DrmChennai) September 17, 2025
2025 செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் 71 வயதான முதியவர் தயாளன். இவர் பார்க் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏற முயன்றார். ரயில் புறப்பட்டவுடன் ஓடி வந்து, அவர் ஏற முயன்றார். அப்போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார்.
Also Read : நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் கொடூர தாக்குதல்.. ஒருவர் பலி
அப்போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசார், அவரை காப்பாற்றினார். கீழே விழுந்தவுடன் அவரை நடைமேடைக்கு அவரை இழுத்து காப்பாற்றியார். இதன் மூலம், நூலிழையில் ரயில்வே போலீசார் முதியவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். பணியில் இருந்த ரயில்வே போலீசார் அஜய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதியவரை காப்பாற்றிய இவருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.