Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரிதன்யாவின் போனை ஆய்வு செய்ய வேண்டும் – கவின் தொடர்ந்த வழக்கு – என்ன நடந்தது?

Rithanya Case Shock : திரூப்பூரில் வரதட்சனை கொடுமையால் ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கவின் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரிதன்யாவின் போனை ஆய்வு செய்ய வேண்டும் – கவின் தொடர்ந்த வழக்கு – என்ன நடந்தது?
ரிதன்யா - கவின்குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Oct 2025 18:12 PM IST

சென்னை, அக்டோபர் 15 :  திருமணமான மூன்றே மாதங்களில்  வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூரை (Tiruppur) சேர்ந்த ரிதன்யாவின் வழக்கு நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின் மற்றும் அவரது பெற்றோர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.  இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கவின் குமார் நீதிமன்றத்தில் ரிதன்யா திருமணத்துக்கு முன் தனது நண்பர்களிடம் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறியதாகவும், அது அவரது செல்போனில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சென்னை  உயர்நீதிமன்றம் (Madras High Court) ரிதன்யாவின் இரண்டு  செல்போன்களை கைப்பற்றி அவற்றை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது பரபர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூரில் கடந்த ஜூன் 28, 2025 அன்று ரிதன்யா என்ற பெண், வரதட்சனை கேட்டு தன்னை கணவர் மற்றும் அவரது வீட்டார் துன்புறுத்துவதாக கூறி வீடியோவை தனது தந்தைக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாட்டையை உலுக்கிய நிலையில், அவரது கணவர் கவின் குமார், அவரது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : சென்னையில் பயங்கரம்.. நடுரோட்டில் திமுக பிரமுகர் கொலை

ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய மனு

இந்த வழக்கில் தற்போது கவின் குமாருக்கும் அவரது பெற்றோருக்கும் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் கவின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் இருந்ததாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு அக்டோபர் 14, 2025 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், கவின் தரப்பில் ரிதன்யாவின் இரண்டு செல்போன்கள் குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் காவல்துறையினர் ஆய்வு செய்ய மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த போனில் திருமணத்துக்கு முன் ரிதன்யா தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று நண்பர்களிடம் பேசிய விவரங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ரிதன்யாவின் இரண்டு போன்களையும் தடவியல் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : கோவையில் பரபரப்பு.. நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு!

இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வரதட்சனை கொடுமையால் ரிதன்யா உயிரிழந்த நிலையில், கவின் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அவர் மீதே கவின் குற்றம் சுமத்துவதாக அவர் மீது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரிதன்யாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்ட பிறகு பல உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.