சாலையில் சென்ற அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்.. தென்காசியில் பரபரப்பு!

Govt Bus Wheel Detaches Mid-Journey | ராணிப்பேட்டை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் சென்ற அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்.. தென்காசியில் பரபரப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Dec 2025 20:44 PM

 IST

ராணிப்பேட்டை, டிசம்பர் 08 : ராணிப்பேட்டை (Ranipet) மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கல்புதூர் பகுதி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று முத்துக்கடை ஆட்டோ நகர் வழியாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டு இருந்தது. பேருந்து சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்தின் இடது பக்கத்தில் இருந்து பின்பக்க சக்கரம் ஒன்று கழன்று சாலையில் ஓடியுள்ளது.

சாலையில் சென்ற அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்

பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதை கண்டு பேருந்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். பயணிகள் கூச்சலிட்ட நிலையில், சக்கரம் சாலையில் ஓடுவதை ஓட்டுநர் கண்டுள்ளார். அதனை கண்டு சுதாரித்துக் கொண்ட அந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலை ஓரம் நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய குளறுபடி…நாதக வேட்பாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள்

சக்கரம் கழன்று ஓடியதன் காரணமாக பேருந்து சாலை ஓரம் நிறுத்தப்பட்ட நிலையில், அதில் பயணம் செய்த பயனர்கள் தாங்க செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், வேறு பேருந்து வரவழைக்கப்பட்டு, அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சக்கரம் கழன்று ஓடிய பேருந்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க : குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. இனி மழை கிடையாது – வெதர்மேன் சொன்னது என்ன?

அரசு பேருந்துகளை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் பழையனதாக உள்ளதாகவும், அதனால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ள நிலையில், அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சாலையில் சென்றுக்கொண்டு இருந்த பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?