மருத்துவமனையில் சிகிச்சைபெறும் எச்.ராஜா.. நேரில் வந்து நலம் விசாரித்த ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோ
Rajinikanth visits H Raja : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த்
சென்னை, பிப்ரவரி 2 : சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஜனவரி 31, 2026 அன்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடார். அங்கு அவருக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து டாக்டர்களின் அறிவுறையின் படி அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ரஜினிகாந்த்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசக்கூடிய கையில் அவர் நலமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : தைப்பூசத் திருவிழாவில் நடந்த சோகம்.. தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..
வைரலாகும் போட்டோ
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் H.ராஜா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தலைவர் ரஜினிகாந்த்.#Thalaivar @rajinikanth #HRaja pic.twitter.com/ZnFFVbhYJB
— Sholinghur N Ravi (@SholinghurRavi) February 2, 2026
இதனையடுத்து அவரை பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பிப்ரவரி 2, 2026 அன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் குணமடைய அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். மேலும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தைபூசத்தை முன்னிட்டு எச்.ராஜா விரைவில் நலம் பெற வேண்டும் என காவடி எடுத்து முருகனிடம் வேண்டிக்கொண்டார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று இங்கு மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 6 நாட்கள் மழை நிலவரம்.. வானிலை ரிப்போர்ட்..
இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் அண்ணன் எச்.ராஜா உடல் நலம் தேறிவருகிறார் என்ற மருத்துவ அறிக்கை எனக்கு ஆறுதலை தருகிறது. விவாதம் முடிந்தவுடன் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார். அவரை நெறியாளர் உட்பட பல சூழ்ந்து கொண்டார்கள் ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டு மேடையை நோக்கி உடனே ஓடினேன். பல்சை பார்த்தேன் சற்று கவலை அடிக்க கூடியதாக இருந்தது. உடனே தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய முதலுதவியை செய்ய ஆரம்பித்து விட்டு அவரை ஆசுவாசப்படுத்தினேன். பலர் உதவினார்கள் சில பேர் காற்று வீசினார்கள். சில பேர் சர்க்கரை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். சில பேர் தண்ணி கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.