புதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்..
Pudukottai New Born Baby Death: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த 3 வாரங்களே ஆன ஆண் குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டிருந்தது. இதனால் அந்த குழந்தையின் தாய், தாய்ப்பால் கொடுத்துள்ளார். அபோது அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு புகைப்படம்
புதுக்கோட்டை, ஆகஸ்ட் 15, 2025: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த மூன்று வாரமே ஆன ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரம் தாய்ப்பால் மட்டுமே ஆகும். இந்த தாய்ப்பால் கொடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தையின் மூக்கு அடைக்கப்படாமல் இருக்கும் வகையிலும், மூச்சு திணறல் ஏற்படாத வகையிலும் மிகவும் கவனித்து கொடுப்பது அவசியமாகும். பிறந்த ஒரு சில மாதங்கள் வரை குழந்தைக்கு படுக்க வைத்து தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல் பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நடந்த சோகம்:
நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் கவனக் குறைவால் தூக்கம் இன்மையால் ஒரு சில விபத்துக்கள் நேரிடுகிறது. அந்த வகையில் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் அந்த குழந்தை உயிருக்கே ஆபத்து ஏற்படும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வேம்பரசன். இவருக்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Also Read: முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு.. நன்றி சொன்ன தூய்மை பணியாளர்கள்!
தாய்ப்பால் குழித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு:
இந்த நிலையில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனால் குழந்தையின் தாய் அந்த குழந்தையை தூக்கி தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டு உள்ளது. இதனால் பதறிப் போன அந்த தாய் வீட்டில் இருப்பவர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த குழந்தையை தூக்கிச் சென்று அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
Also Read: பஸ் டிக்கெட் டூ ரேஷன் கார்டு.. வாட்ஸ் அப் வழியாகவே ஈஸியா பண்ணலாம்.. தமிழக அரசு அறிவிப்பு
அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை வரும் வழியே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அந்த தாய் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து வடகாடு காவல்துறை வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர் ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்த போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையிலும் பிறந்த குழந்தை தாய்ப்பால் குடித்த போது உயிரிழந்தது. அதனை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆறு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக மருத்துவர்கள் தாய்மார்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.