வடமாநில இளைஞர் குடும்பத்துடன் கொலை.. 2 வயது குழந்தை சடலமாக மீட்பு… சென்னையில் பகீர் சம்பவம்
Chennai Murder Case : சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26, 2026 அன்று அதிகாலை சாலையோரமாக சாக்குமூட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கௌரவ் குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது 2 வயது குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 28 : சென்னை (Chennai) அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26, 2026 அன்று அதிகாலை சாலையோரமாக சாக்குமூட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கௌரவ் குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கௌரவ் குமாரின் 2 வயது குழந்தையின் உடலும் மத்திய கைலாஷ் அருகே உள்ள அடையாறு ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடந்தது என்ன?
கடந்த ஜனவரி 26, 2026 அன்று சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாலையோரமாக பீகார் மாநில இளைஞர் சாக்குபையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த அடையாறு காவல்துறையினர் சம்பவத்துக்கு இடத்துக்கு விரைந்து வந்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர் பீகாரைச் சேர்ந்த 24 வயதான கௌரவ குமார் என்பது தெரியவந்திருக்கிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது உடலை இரண்டு இளைஞர்கள் சாக்குமூட்டையில் வீசி சென்றது தெரியவந்திருக்கிறது. அவர்களது இரு சக்கர வாகன பதிவு எண் அடிப்படையில் இருவரையும் கைது செய்திருக்கின்றனர்.
இதையும் படிக்க : பெரம்பலூரில் ரெளடி மீது என்கவுண்டர் ஏன்? மத்திய மண்டல ஐ.ஜி. பரபரப்பு விளக்கம்!
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், ஒரே குடும்பத்தையே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சிக்கும்போது அதனை தடுக்க முயன்ற கௌரவ குமார் மற்றும் குழந்தை என மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு.. ரவுடி அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காலையிலேயே பரபரப்பு..
விசாரணையின் போது, கைது செய்யப்பட்டவர்கள் கௌரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரையும் கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில், தற்போது மத்திய கைலாஷ் அருகே உள்ள ஆற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கௌரவ் குமாரின் மனைவியின் உடலை இன்னும் கண்டெடுக்க முடியாததால், அவரது உடலை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆற்றுப்பகுதிகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் போலீசார் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து வருவதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இந்த வழக்கு சென்னை மாநகரில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.