கடலூரில் பரபரப்பு.. போலீசாரை தாக்கிய கும்பல்.. சுட்டுப்பிடித்த போலீஸ்
Cuddalore Crime News : கடலூரில் ரகளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீசார் அந்த கும்பலை கைது செய்ய முயன்றபோது, அவர் போலீசார் தாக்கியதை அடுத்து, துப்பாக்கியால் சுட்டு போலீசார் 2 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பியோடிய நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

கோப்புப்படம்
கடலூர், செப்டம்பர் 11 : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இரண்டு போலீசார் உட்பட ஆறு பேரை தாக்கிய கும்பலை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 பேர் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் போதை கும்பல் ஒன்று பொதுமக்களிடம் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தகவல் கிடைத்தது. மூன்று பேர் கொண்ட தனியாக இருக்கும் நபர்களை தாக்கி வருவதாக தெரிகிறது. விருத்தாசலம் அருகே நெய்வேலியைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). இவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் விருத்தாசலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் அரசு பேருந்தில் ஏறி, ஓட்டுநர் கணேசனை மது பாட்டில்களால் அந்த கும்பல் தாக்கி உள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சிறிய கடைகளை சேதப்படுத்திய அவர்கள், கடைக்காரர்களான ராஜேந்திரன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோரைத் தாக்கி தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மூன்று பேரையும் பிடிப்பதற்காக தேடி வந்தனர்.
Also Read : தோழியுடன் காணாமல் போன பெண்.. காதலன் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்!
ரகளையில் ஈடுபட்ட கும்பலை சுட்டுப் பிடித்த போலீஸ்
தாக்குதல் நடத்தியவர்கள் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த கே. கந்தவேல் (21), எம். சிவா என்கிற விக்னேஷ் (20), பாலாஜி (21) என போலீசார் அடையாளம் கண்டனர். இந்த கும்பல் போதையில் மக்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மங்கலம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தி, கண்டியங்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரித் தோப்பில் கும்பலைக் கண்டுபிடித்தனர்.
Also Read : காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி
போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது, அந்தக் கும்பல் வீரமணி மற்றும் வேல்முருகன் ஆகியோரை அரிவாளால் தாக்கியது. இதனை அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கந்தவேலின் வலது காலில் காயம் ஏற்பட்டது. தப்பிக்க முயன்ற சிவாவின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடியதாக போலீசார் கூறினர்.