போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..

Chennai Crime: சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Jul 2025 09:24 AM

சென்னை, ஜூலை 28, 2025: சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், போதை மாத்திரை பயன்படுத்திய இருவரை கைது செய்துள்ளனர். சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா, பாங்கு, போதை சாக்லேட்டுகள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், இளைஞர்கள் ஆகியோர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்:

சென்னை பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இவ்வாறு தனிமையில் இருக்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அங்கு உள்ள விடுதிகள் அதேபோல் சிறு கடைகள் டீக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மப்டியில் சோதனைகள் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: கிட்னி விற்பனை மோசடி.. மருத்துவமனைக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

அப்போது சோதனையின் போது பொத்தேரி அடுத்த ஒரு தனியார் குடியிருப்பில் போதை மாத்திரைகள், பாங்கு அதே போல் கஞ்சா அடிக்க பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு இருந்த இரண்டு வாலிபர்களை கைது செய்து தற்பொழுது மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தை.. கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்!

போதை பொருட்கள் எப்படி கிடைக்கிறது?. போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார் ?. போதைப்பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சோதனை முடிந்த பிறகு எத்தனை பேர் கைது செய்கின்றார்கள் என்ற விவரம் தெரிய வரும்.