ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு விடை கொடுக்க தயாரான தமிழ்நாடு – பிரதமர் மோடி..
PM Modi On Dmk: பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருப்பதாகவும், இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும், ஊழல் நிறைந்த திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 23, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி 23, 2026 தேதியான இன்று மதுராந்தகத்தில் அதிமுக–பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்திலிருந்து பிற்பகலில் புறப்பட்டு, மாலை 5 மணி அளவில் சென்னை வந்தடைவார். இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைய நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தான் கலந்து கொள்வதாகவும், ஊழல் நிறைந்த திமுக அரசிற்கு விடை கொடுப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்தச் சூழலில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 50 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாஜக கேட்கும் 50 தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
அதிமுக–பாஜக பிரச்சார பொதுக்கூட்டம்:
இந்த நிலையில், ஜனவரி 23, 2026 தேதியான இன்று மதுராந்தகத்தில் அதிமுக–பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இடம்பெறுவார்கள் எனவும், அந்த மேடையில் யாருக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது குறித்தும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு விடை கொடுக்க தயாரான தமிழ்நாடு:
Tamil Nadu is with NDA!
I’ll be joining NDA leaders at the rally in Madhuranthakam later today. Tamil Nadu has decided that it’s time to bid farewell to the corrupt DMK Government.
The NDA’s governance record and commitment to regional aspirations are striking a chord with…
— Narendra Modi (@narendramodi) January 23, 2026
இந்தச் சூழலில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருப்பதாகவும், இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும், ஊழல் நிறைந்த திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.