ஓடும் ரயில் முன் பாய்ந்து பிளஸ் 1 மாணவர் தற்கொலை – திருவள்ளூர் அருகே அதிர்ச்சி சம்பவம் – என்ன நடந்தது?
Student Suicide Case : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பூவரசன் என்ற மாணவர் நேற்று வழக்கம் போல பள்ளி சென்று மாலையில் வீட்டுக்கு போகாமல் நேரடியாக ஆரம்பாக்கம் ரயில் நிலையம் சென்று, ஓடும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர், டிசம்பர் 13: ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர் திடீரென ஓடும் ரயில் (Train) முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து, ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. கூலி வேலை செய்து வரும் இவருக்கு பூவரசன் என்ற மகன் உள்ளார். இவர் ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தான் டிசம்பர் 12, 2025 மாலை பள்ளிக்கு சென்று திரும்பிய அவர், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ரயில் முன் பாய்ந்து பிளஸ் 1 மாணவர் தற்கொலை
ஆரம்பாக்கத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பூவரசன் டிசம்பர் 12, 2025 நேற்று வழக்கம் போல பள்ளி சென்று மாலையில் வீட்டுக்கு போகாமல் நேரடியாக ஆரம்பாக்கம் ரயில் நிலையம் சென்றிருக்கிறார். அங்கே மின்சார ரயில்கள் வந்து செல்லும் பகுதியில் நின்றபடி இருந்திருக்கிறார். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் வந்து கொண்டிருந்திருக்கிறது.
இதையும் படிக்க : மத்திய கைலாஷில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணிகள்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..




இந்த நிலையில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பூவரசன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் தலை துண்டானதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அலறி துடித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் மாணவரின் உடலைக் கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசதோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..
மன அழுத்தம் காரணமாக தற்கொலையா?
பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளி மாணவர் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதற்கான காரணம் குறித்து அவர் படித்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மன அழுத்தத்தில் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)