Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Anbumani Ramadoss: அன்புமணி பதவிக்காலம் நீட்டிப்பு.. பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் பொதுக்குழுவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காணலாம்.

Anbumani Ramadoss: அன்புமணி பதவிக்காலம் நீட்டிப்பு.. பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
Anbumani
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Aug 2025 14:43 PM

செங்கல்பட்டு, ஆகஸ்ட் 9: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) அடுத்த ஓராண்டுக்கு தொடர்வார் என அவர் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அவரது பதவிக்காலம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் (Assembly Election In Tamil Nadu) திமுக (DMK) அரசை வீழ்த்துவது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் திமுக ஆட்சியில் மின்கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி ஆகியவை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சியில் 7 ஆயிரம் படுகொலைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அன்புமணி பொதுக்குழுவில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றபபட்ட தீர்மானங்கள்:

  • வருகின்ற 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்த ஓராண்டு அவகாசம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதவியில் நீடிப்பார்கள்.
  • விரைவில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
  • தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விடுதலை நாள் அறிவிப்பாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
  • சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வலுவான கண்டனங்கள்.
  • பாமக தலைவர் அன்புமணி மேற்கொண்டு இருக்கும் ‘மக்கள் உரிமை மீட்பு’ பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெற செய்ய பாமக உறுதி ஏற்கிறது.
  • தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய தவறிய திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு கண்டனம்.
  • தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாமக கட்சியின் இலக்காகும்.
  • தமிழ்நாட்டில் இதுவரை 4 முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.
  • தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நிதி ரூ. 2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
  • தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதையடுத்து, உடனடியாக தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசைகளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
  • இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.