ராமதாஸ் தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார்.. டி.எஸ்.பி அலுவலகத்தில் மனு..
PMK Founder Ramadoss Phone Hacked: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாப்புரம் வீட்டில் தனது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ்
சென்னை, ஆகஸ்ட் 5, 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் தொலைபேசியை யாரோ ஹேக் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அவரது நேர்முக உதவியாளர் புகார் மனு அளித்துள்ளார். டி எஸ் பி அலுவலகத்தில் புகாரை பெற்ற காவல் துறையினர் இந்த தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்த வரையில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பாமக தொண்டர்கள் மத்தியில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவருமே தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 9 2025 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 17 2025 அன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தைலாப்புரம் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவி:
இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் வீட்டில் தான் அமரும் இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருப்பதாகவும், லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த விலை உயர்ந்த ஒட்டு கேட்ப கருவி யார் வைத்தது என்பது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஜூலை 17 2025 ஆம் தேதி சென்னை தனியார் உலவு நிறுவனத்தை சேர்ந்த எட்டு பேர் தைலாபுரம் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு ஒட்டு கேட்கும் கருவியை எடுத்துச் சென்றனர்.
Also Read: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உயர்நீதிமன்றம் வேதனை..
அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது அன்புமணி ராமதாஸ் என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். தந்தையை மிஞ்சிய மகன் என்றும் பரபரப்பாக பேட்டி அளித்தார்.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடத்தப்படும் த.வெ.கவின் இரண்டாவது மாநாடு? இன்று விஜய் அறிவிப்பு..
ராமதாஸின் தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக புகார்:
இந்த நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. wi-fi மூலம் சட்டவிரோதமாக ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும் ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸ் நேர்முக உதவியாளர் இந்த புகார் மனுவை காவல்துறையினரிடம் அளித்ததாகவும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.