கரூர் வழக்கு… தனி நபரை பலிகடாவாக்குது நோக்கமல்ல… முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Karur Stampede : கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரையும் பலிகடா ஆக்குவது நோக்கமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் வழக்கு... தனி நபரை பலிகடாவாக்குது நோக்கமல்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

விஜய் - மு.க.ஸ்டாலின்

Published: 

15 Oct 2025 19:07 PM

 IST

தமிழக சட்டமன்றம் இரண்டாவது நாளாக அக்டோபர் 14, 2025 அன்று கூடியது. அப்போது அதிமுக தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) தாமதமாக வந்தார். இதுதான் கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணம் என்றார். மேலும், அப்போது பேசிய பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாக சொல்கின்றனர் என கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த முதல்வர், தண்ணீர் இல்லை என்பதால் அவரது கவனத்தை திசை திருப்பவே செருப்பு வீசப்பட்டிருக்கிறது. சிபிஐ விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்யை முதல்வர் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இதையும் படிக்க : TVK Vijay: கரூர் செல்லும் விஜய்.. எப்போ தெரியுமா? – வெளியான தகவல்!

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 – தவெக நிர்வாகி அறிவிப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து விஜய் வருகிற அக்டோபர் 17, 2025 அன்று கரூர் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் தனியார் மண்டபத்தில் பாதிக்கப்ப்டட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் விஜய், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை என கூறப்படுகிறது.