ஒரே காரில் ஒன்றாக தேவர் நினைவிடம் சென்ற ஓபிஎஸ் – செங்கோட்டையன்.. உருவாகும் புதிய அணி??

Ops - Sengottaiyan travels in same car: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்துள்ளது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தொடர்ந்து, இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் புதிய அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரே காரில் ஒன்றாக தேவர் நினைவிடம் சென்ற ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. உருவாகும் புதிய அணி??

ஒரே காரில் ஓபிஎஸ் - செங்கோட்டையன்

Updated On: 

30 Oct 2025 12:27 PM

 IST

ராமநாதபுரம், அக்டோபர் 30: அதிமுகவில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், .பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் தேவர் நினைவிடத்திற்கு பயணம் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகைபயில், முதல்வர் ஸ்டாலினும், துணைகுடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் இன்று காலை பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

Also read: ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செங்கோட்டையன் பொறுப்புகளை பறித்த இபிஎஸ்:

தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கமான ஒரு காரியமாக இருந்தாலும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட .பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பயணித்துள்ளது அரசியலில் பெரும் பேசுபொருளாக ஆகியுள்ளது. அதிமுக ஒன்றினைய வேண்டுமென வலியுறுத்திய செங்கோட்டையனை, எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியிருந்தார். இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் செங்கோட்டையன் இருக்கிறார். அவருக்கு தற்போது வேறு எந்த பொறுப்பிலும் இல்லை. இந்த நிலையில் அவர் .பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக பயணித்துள்ளது பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இபிஎஸ்-க்கு புதிய சவால்:

நீண்ட நாட்களாக அதிமுக ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி வருபவர் .பன்னீர்செல்வம். அவர் பல பேட்டிகளில், செங்கோட்டையன் உடன் தான் பேசிக்கொண்டு இருப்பதாக கூறியிருந்தார். எனினும், பொதுவெளியில் இவ்வளவு நாள் இதனை வெளிகாட்டாமல் இருந்த நிலையில் இன்று இருவரும் ஒன்றாக பயணித்துள்ளனர். அதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு சவாலான காரியமாக ஆகியுள்ளது. தற்போது செங்கோட்டையனையும் கட்சியில் இருந்து நீக்க உள்ளாரா அல்லது நடவடிக்கை எடுக்காமல் விடுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.

Also read: விஜய்யுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி?.. உண்மையை போட்டுடைத்த அமித்ஷா!!

இதனிடையே, முதலில் ஒரே காரில் முன் இருக்கையில் .பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் செங்கோட்டையன் அமர்ந்திருந்தார். சிறிது தூரம் ஒரே காரில் பயணித்த அவர்கள், பின்னர் திறந்த வேனில் ஒன்றாக மேல் நின்றபடி செல்கின்றனர். அவர்களுடன் நூற்றக்கணக்கான தொண்டர்களும் காரில் பின்தொடர்ந்து அணிவகுத்து படி பசும்பொன் செல்கின்றனர். வழிநெடுக, அவர்கள் இருவருக்கும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பசும்பொன்னில் அவர்களுடன் டிடிவி தினகரனும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக பொறுமையாக இருந்த செங்கோட்டையன் யாரும் எதிர்பாராத விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை