கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் பதில்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்!

Seeman Responded To Congress MP Karthi Chidambaram | காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு அங்கு வீடு இல்லை, வாக்கு இல்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருந்த நிலையில், அதற்கு நாதக தலைவர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் பதில்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்!

நாதக தலைவர் சீமான்

Published: 

08 Apr 2026 08:01 AM

 IST

சென்னை, ஏப்ரல் 08 : தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு இங்கு ஓட்டு கிடையாது. சீமானுக்கு இங்கு சொந்த வீடு கிடையாது என விமர்சித்த நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கார்த்தி சிதம்பரத்திற்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு சீமான் அளித்துள்ள விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் பதில்

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடியில் பிரசாரம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது பேசிய அவர், சீமானுக்கு இங்கு ஓட்டு கிடையாது. சீமானுக்கு இங்கு சொந்த வீடு கிடையாது என விமர்சித்தார்.

இதையும் படிங்க : விஜய பிரபாகரனுக்கு கை கொடுக்குமா விருதுநகர் தொகுதி… கள நிலவரம் கூறுவதென்ன!

இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த சீமான் கூறியதாவது, இந்த விமர்சனம் தொடர்பாக நான் பேச தொடங்கினால் நீண்ட நேரம் ஆகும். இதற்கு என் தம்பி, தங்களைகள் கார்த்தி சிதம்பரத்திற்கு பதில் கொடுப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். அவரது அப்பா சிதம்பரம் பேசட்டும் அப்போது நான் பேசுகிறேன். கார்த்தி சிதம்பரம் பேசுவது சிறுபிள்ளை தனமானது என்று அவர் கூறியுள்ளார்.

அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நாதக தலைவர் சீமான்

மக்களவை தொகுதியில் கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அங்கு அவருக்கு வீடு இருந்ததா, வாக்கு இருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி மக்களை தொகுதியில் போட்டியிட்டார், அவருக்கு அங்கு வீடு இருந்ததா, வாக்கு இருந்ததா. தமிழக சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு அங்கு வீடு உள்ளதா, வாக்கு உள்ளதா. அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்

இதுவரை நாய், நரியை தான் தேர்தலில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், நான் புலி, என்றும் அந்த பயம் இருக்கட்டும். காரைக்குடியில் வந்து நான் வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். காரைக்குடியில் தான் எனக்கு வீடு இல்லை. ஆனால், இந்த நாடே என் வீடு. ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் செல்ல பிள்ளை நான் என்று கூறியுள்ளார்.

Follow Us
Related Stories
பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு… எஸ்.ஐ. இசக்கி ராஜா உள்பட 3 போலீசாருக்கு செக் வைத்த தென்காசி எஸ்.பி.!
சாத்தான்குளம் எதிரொலி: லத்திக்கு பூட்டு, காவல்துறை விசாரணைக்கு புதிய விதி..!
நெல்லையில் இன்று விஜய் பிரப்புரை.. 4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல்.. ரோடு ஷோ செல்ல திட்டம்..
தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்.. 5,900 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? வானிலை அப்டேட்!!
மக்கள் நீதி மய்யம் விருப்ப மனு கட்டணம்… தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… நிம்மதி பெருமூச்சு விட்ட நிர்வாகிகள்!
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?