இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Diwali 2025 Weather Forecast : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Oct 2025 11:06 AM

 IST

தீபாவளி (Diwali) பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்னும் ஒருவாரமே உள்ளதால் மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான ஊர்களில் உள்ள கடை வீதிகள் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை (Rain) பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழையைும் விரைவில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு மழை வருமான என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு மழை வருமா?

இதன் ஒரு பகுதியாக தென் மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் தலைவர் அமுதா தெரிவித்துள்ளதாவது, வட கிழக்கு பருவமலை அக்டோபர் 16 முதல் 18 2025 தேதிக்குள் தொடங்க வாய்ப்புகள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார். மேலும் தென்மேற்கு பருவமை முடிவடைவது மட்டுமல்லாமல் கிழக்கு திசையில் காற்றுகள் இந்த காலகட்டத்தில் வலுப்பெறும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழைகாலம் தொடங்கும் என அறவித்தார்.

இதையும் படிக்க : இன்று பிச்சு உதறபோகும் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிக்கு மழை வருமான என்பதை 5 நாட்களுக்கு முன்பு ம்டடுமே உறுதியாக சொல்ல முடியும். எனவே அக்டோபர் 20, 2025 அன்று மழை வருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார். மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக கன மழை பெய்யும் எனவும் தென் மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை ஒரு பக்கம் இருக்க, வெதர் மேன் என அழைக்கப்படும் பிரபல தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளங்களில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி நாளில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் வட தமிழக பகுதிகளில் தீபாவளி அன்று கனமழை பெய்யக் கூடும். மேலும் அக்டோபர் 17 முதல் 21, 2025 வரை வட மாவட்டங்களில் மழை கடுமையாக பெய்ய வாய்ப்புகள் தெளிவாக தெரிகின்றன.

இதையும் படிக்க : தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் குறையும் கட்டணம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

டெல்டா வெதர்மேனின் மாற்றுக்கருத்து

இந்த நிலையில் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தனது கணிப்பில் மக்கள் நிம்மதியடையலாம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, மாநிலம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. சில இடங்களில் மட்டுமே இடியுடன் கூடிய மழை இருக்கும். குறிப்பாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். வணிகம், தீபாவளி கொண்டாட்டம் ஆகியவை பாதிக்கும் அளவுக்கு மழை இருக்காது என்றார். கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளி நாளில் அதிக மழை பெய்த ஆண்டு 2011 தான் என்றார்.