திருத்தணியை தொடர்ந்து கோவையிலும் வட மாநில இளைஞர்களுக்கு கத்திக்குத்து- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Coimbatore Migrant Attack: திருத்தணியில் வடமாநில தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் கோவையில் வட மாநில இளைஞர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருத்தணியை தொடர்ந்து கோவையிலும் வட மாநில இளைஞர்களுக்கு கத்திக்குத்து- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கோவையில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்

Updated On: 

31 Dec 2025 16:11 PM

 IST

கோயம்புத்தூர், டிசம்பர் 31: கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வேலை செய்து வரும் வட இந்திய தொழிலாளர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் கோவிந்த் கோண்ட் ஆகிய இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

டீக்கடையில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில், வேலை முடிந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு தேநீர் கடையில் ராகேஷ் மற்றும் கோவிந்த் கோண்ட் இருவரும் தேநீர் அருந்த சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள், அவர்களிடம் ஏதோ கேள்வி கேட்டதாகவும், அதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர்கள் திடீரென புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : “எப்போது வருவீர்கள் முதல்வரே?” 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்!

இந்த தாக்குதல் சம்பவத்தில் ராகேஷ் மற்றும் கோவிந்த் கோண்ட் இருவரும் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு, தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட காட்சிகள் தேநீர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அது சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி, தாக்குதலுக்கான காரணம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : தமிழகத்தில் நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிப்பு.. 33 பேர் உயிரிழப்பு.. ஷாக் தகவல்!!

சமீபத்தில் திருத்தனியில் வட மாநில இளைஞர் மீது 4 சிறுவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது அடங்குவதற்குள் கோயம்புத்தூரில் வட மாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  தொழிலாளர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்படாமல் இருக்க, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..