இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

Norttheast Monsoon: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வடசென்னை மற்றும் கடலோர பகுதிகளில் 100 மில்லிமீட்டர் கடந்த மழை பதிவு செய்யப்பட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Oct 2025 08:22 AM

 IST

வானிலை நிலவரம், அக்டோபர் 16, 2025: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து அக்டோபர் 16, 2025 என்ற இன்று விலகக்கூடும் எனவும் அதே சமயம் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா, மாஹே, தெற்கு உள் கர்நாடகம், பிராய்லசிமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இலட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் அக்டோபர் 19, 2025 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில், கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்களே உஷார்.. சைபர் மோசடியில் ரூ.7 கோடியை இழந்த மருத்துவர்!

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

இதன் காரணமாக அக்டோபர் 16, 2025 (இன்று) தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 17, 2025 எனும் நாளை சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

அதேபோல் அக்டோபர் 18, 2025 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி நாளான அக்டோபர் 20, 2025 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மழையின் தீவிரம் படிப்படியாக உயரக்கூடும் – பிரதீப் ஜான்:


வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வடசென்னை மற்றும் கடலோர பகுதிகளில் 100 மில்லிமீட்டர் கடந்த மழை பதிவு செய்யப்பட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.