அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம்!
Next Five Days Tamil Nadu Will Have Moderate Rain | அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 30 : தமிழ்நாட்டில் (Tamil Nadu) அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட ஒடிசா முதல் தென் தமிழகம் வரை, தெலங்கானா மற்றும் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என்று கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏப்ரல் 2 ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று (மார்ச் 30, 2026) முதல் ஏப்ரல் 02, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் மற்ற சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!
ஏப்ரல் 3 ஆம் தேதி லேசான மழை பெய்யும்
ஏப்ரல் 03, 2026 அன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி.. வெளியான புதிய தமிழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்