1000 மரங்கள் நட்டால் இறுதி சடங்கில் அரசு மரியாதை – மரங்களின் மாநாட்டில் சீமான் பேச்சு

Naam Tamilar Party Seeman: நாம் தமிழர் கட்சி தரப்பில் மரங்களுக்கான மாநாடு திருத்தனி அருகே நடைபெற்றது. அப்போது பேசிய கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒருவர், ஆயிரம் மரங்கள் நட்டால் இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

1000 மரங்கள் நட்டால் இறுதி சடங்கில் அரசு மரியாதை - மரங்களின் மாநாட்டில் சீமான் பேச்சு

மரங்களின் மாநாட்டில் சீமான்

Published: 

30 Aug 2025 21:03 PM

திருத்தணி, ஆகஸ்ட் 30, 2025: நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்ந்த “மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காக பேசுவோம்” என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பில் வித்தியாசமான மாநாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் கால்நடைகளுக்கான மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த மரங்களுக்கான மாநாடு நடைபெற்றது.

இது மரங்களுக்கான மாநாடு அல்ல, நன்றி செலுத்தும் மாநாடு:


இந்த நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இது வெறும் மர மாநாடு அல்ல; உயிர்க்காற்றைத் தரும் நம் தாய்க்கு நன்றி செலுத்தும் மாநாடு. மரங்கள் வெட்டப்படுவதால் பருவமழை மாறி வருகிறது. இனி பருவமழை கிடையாது, புயல் மழை மட்டும் தான் இருக்கும்.

Also Read: அண்ணாமலை குறித்து யாரும் பேச வேண்டாம் – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..

பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, அதனை தாங்க முடியாமல் ஒருநாள் கடல் கொந்தளித்து சுனாமி ஏற்படும். கடந்த காலத்தில் வந்த ஒரு சுனாமியையே நம்மால் தாங்க முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் பூமி பேரழிவை சந்திக்கும்.

காற்றையும் கூட விற்பனை செய்வார்கள் – சீமான்:

தண்ணீரைத் தொடர்ந்து காற்றையும் கூட இவர்கள் விற்பனை செய்வார்கள். டெல்லியைப் போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை பாட்டிலில் இருக்கும் நிலை வரும். வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணி மரங்களின் பணி. நான் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பிறந்தநாளிலும் குழந்தைகள் ஒவ்வொருவரும் மரம் நட வேண்டும் எனச் சொல்வேன்.

Also Read: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள சீனா சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு..

ஒரு மாணவன் பத்து மரங்களை நட்டால் தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு மரம் நட்டால் சிறந்த தமிழ் தேசிய குடிமகன் என பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஆயிரம் மரங்கள் நட்டால் இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும். மக்கள் மரங்களை நடுவதற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்,” எனப் பேசியார்.