Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Seeman : திமுக அவ்வளவு பெரிய எதிரி அல்ல.. மதுரையில் சீமான் பேச்சு!

Seeman Spoke About DMK Power in Tamil Nadu | தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பதில் அளித்துள்ளார்.

Seeman : திமுக அவ்வளவு பெரிய எதிரி அல்ல.. மதுரையில் சீமான் பேச்சு!
சீமான்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 09:45 AM

மதுரை, மே 28 : திராவிட முன்னேற்ற கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam) அவ்வளவு பெரிய எதிரி அல்ல, திமுகவின் ஓட்டு 12 சதவீதம் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் (NTK – Naam Tamilar Katchi) சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாதக தலைவர் சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அவ்வளவு பெரிய எதிரியாக நான் பார்க்கவில்லை. திமுக அவ்வளவு பெரிய எதிரி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் ஓட்டு 12 சதவீதம் தான். எல்லா கூட்டணிகளையும் சேர்த்து கொண்டு பாஜகவின் பூச்சாண்டியை காட்டி கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் 18 சதவீத ஓட்டுக்களை பெறுகிறது என்று கூறியுள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிரியாக இந்தியா – பாகிஸ்தான் போல பகை உணர்வை திமுக உருவாக்கி வைத்திருக்கிறது. அவ்வளவு பெரிய வீழ்த்த முடியாத எதிரி அல்ல திமுக. எல்லாரும் சேர்ந்து தான் வீழ்த்த முடியும் என்ற அளவுக்கு கொம்பன் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல் பேச்சை வரவேற்ற சீமான்

தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெங்களூரில் தக் லைஃப் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், உணமையை உணராத கூட்டம். வரலாறு தெரிந்தால் எதிர்க்க மாட்டார்கள். அண்ணன் கமல்ஹாசன் சொன்னது உண்மை. தமிழிலிருந்து கண்ணடம் உருவானது. கமல்ஹாசன் பேசியது உண்மைஅ என்று அவர் தெரிவித்துள்ளார்.