விருதுநகரில் 2 முறை நில அதிர்வு – பீதியில் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்
Earthquake in Virudhunagar : விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம், பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சில நொடிகளுக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
விருதுநகர், ஜனவரி 29 : விருதுநகர் (Virudhunagar) மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம், பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சில நொடிகளுக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். நில அதிர்வுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சமின்றி அமைதியாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2 முறை நில அதிர்வு
விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி 29, 2026 அன்று திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விருதுநகர், கிருஷ்ணன்கோவில், கம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சில நொடிகளுக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட அதிர்வால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர்.
இதையும் படிக்க : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 நாட்கள் அவகாசம் – திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
பகுதி மக்கள் கூறுகையில், நில அதிர்வு இரண்டு முறை உணரப்பட்டது, சில வீடுகளில் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். நில அதிர்வு சில விநாடிகள் மட்டுமே நீடித்தாலும், அதன் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 3.0 பதிவான நில அதிர்வு
தகவல்களின்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நில அதிர்வு குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நில அதிர்வால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும், மக்கள் பாதுகாப்பு கருதி திறந்த வெளிகளில் நின்று நிலைமையை கவனித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் முதன்முறையாக நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில் மக்கள் சாலைகளில் திரண்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.